வியாழன், 30 ஆகஸ்ட், 2018
மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை
மாணவர்கள் திறந்து வைத்த ஸ்மார்ட் வகுப்பறை
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் இரண்டாவது ஸ்மார்ட் வகுப்பறை இன்று திறக்கப்பட்டது. கோவிந்தப்பேரி மனோ கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.ஆ .விக்டர்பாபு தலைமைவகித்தார். திரு. பாலமுரளி அவர்கள் முன்னிலை வகித்தார். ஸ்மார்ட் வகுப்பறையினை இந்து நடுநிலைப்பள்ளியின் முதலாம் வகுப்பு மாணவர்கள் திறந்து வைத்தார்கள் . கோவிந்தப்பேரி மனோ கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர்.ஆ .விக்டர்பாபு அவர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
அனைத்து வகுப்பறைகளுமே ஸ்மார்ட் வகுப்பறை
எங்களது கனவான அனைத்து வகுப்பறைகளுமே ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் திட்டத்தில் இரண்டாவது வகுப்பறையினை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றும் பணி இன்று நிறைவடைந்தது . ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க பண உதவி செய்த எம் பள்ளியின் புரவலர் திரு . கணபதி சுப்பிரமணியன் அவர்களுக்கும் , ப்ரொஜெக்டர் வழங்கிய
எம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களின் கணவர் திரு. பாலமுரளி அவர்களுக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்த வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறை என்ற நம்பிக்கையுடன்........ எங்களால் முடியும் ....
எம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களின் கணவர் திரு. பாலமுரளி அவர்களுக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.. இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்த வகுப்பறை ஸ்மார்ட் வகுப்பறை என்ற நம்பிக்கையுடன்........ எங்களால் முடியும் ....
சனி, 25 ஆகஸ்ட், 2018
மாநில அளவிலான யோகா போட்டி- அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டு
தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்ட் நடத்திய மாநில அளவிலான
யோகாப்போட்டியில் கலந்து கொண்டு 28(முதல் பரிசு 12, இரண்டாம் பரிசு 10, மூன்றாம் பரிசு 6)பரிசுகள் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர்...
தமிழ் நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு.கடம்பூர்
ராஜு அவர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்... இந்த வாய்ப்பினை அளித்த தமிழ் கல்ச்சுரல் மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் ட்ரஸ்ட் துணைத்தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி, மற்றும் எம் பள்ளி யோகா பயிற்சியாளர் திரு. ராஜேஷ், ஓவிய ஆசிரியர் திரு. துரை ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதன், 15 ஆகஸ்ட், 2018
72-வது சுதந்திர தின விழா
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 72-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் வரவேற்புரையாற்றினார். பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் தலைமைதாங்கினார். நம் பள்ளியின் புரவலர் திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்கள் . பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப்பொருள் வழங்கி, இரண்டாவது ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூபாய் 10000/- வழங்கினார்கள். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்து செல்வி நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி, திருமதி. ஜேஸ் மாலா , திருமதி. கோமதி , செல்வி. துரைச்சி ஆகியோர் செய்திருந்தனர்.
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















