சிறகின் ஓசை
ஆறாம் வகுப்பு தமிழ் கூடுதல் தகவல்கள் வினா விடைகள்
வலசை போதல்
மே பத்தாம் தேதி உலக வலசை போதல் தினமாக அனுசரிக்கப்படுகிறது வலசை போதல் என்றால் புலம்பெயர்தல் என்று பொருள் பறவைகள் தங்களின் வாழ்விடத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த திசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேரும் இடத்தை கண்டறிகின்றன வலசை போகும் பறவைகளை பாதுகாப்பது அதன் இருப்பிடத்தை பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006 ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவிகளின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டுகளாகும் சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதியிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது
சிட்டுக்குருவிகள் அனைத்துண்ணியாகும் . தானியங்களையும் புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும். சில வகை குருவிகள் பூ மொட்டுகளையும் உண்ணும் . சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலே வளர்கின்றன. பறக்கத் தொடங்கியுடன் . தனியாகப் பிரிந்து விடுகின்றன
சுற்றுச்சூழல் மாற்றங்களால் உலகம் முழுவதும் மரங்களும் பறவைகளும் அழிந்தும் குறைந்தும் வருகின்றன . தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவி இனத்தின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடா மாற்றி விடுவதால் சிட்டுக்குருவிகளின் இனம் அழிவை நோக்கி செல்கிறது.
சிட்டுக்குருவிகளின் தேவையை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை மார்ச் மாதம் இருபதாம் தேதியை உலக சிட்டுக்குருவில் தினமாக 2010 ஆம் ஆண்டு அறிவித்தது
டெல்லி அரசு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அறிவித்துள்ளது
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.‘தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
அ) தட்பம் + வெப்பம்
ஆ) தட்ப + வெப்பம்
இ) தட் + வெப்பம்
ஈ) தட்பு + வெப்பம்
அ) தட்பம் + வெப்பம்
2.வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) வேதி + யுரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
இ) வேத் + உரங்கள்
ஈ) வேதியு + ரங்கள்
ஆ) வேதி + உரங்கள்
3.தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) தரையிறங்கும்
ஆ) தரை இறங்கும்
இ) தரையுறங்கும்
ஈ) தரைய்றங்கும்
Answer:
அ) தரையிறங்கும்
4.வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) வழிதடம்
ஆ) வழித்தடம்
இ) வழிதிடம்
ஈ) வழித்திடம்
ஆ) வழித்தடம்
5.சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ……………….
அ) துருவப்பகுதி
ஆ) இமயமலை
இ) இந்தியா
ஈ) தமிழ்நாடு
அ) துருவப்பகுதி
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா
2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் சத்தி முத்தப் புலவர்
3. பறவைகள் இடம்பெயர்வதற்கு வலசை போதல் என்று பெயர்.
4. இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர். சலீம் அலி
5. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று தட்ப வெப்ப நிலை மாற்றம்
சொற்றொடர் அமைத்து எழுதுக
1. வெளிநாடு …………………
விடை : நம் நாட்டில் படித்துவிட்டு வெளிநாடு சென்று வேலை செய்வது நல்லது அன்று.
2. வாழ்நாள் …………………
விடை : வாழ்நாள் முழுவதும் உண்மை மட்டுமே பேசி வருவேன் என்று உறுதி கூறுகிறேன்
3. செயற்கை ……………….
விடை : தற்கால மனிதர்கள் இயற்கையை விட செயற்கையை விரும்புகிறார்கள்
பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக
1. மரங்களை வளர்த்து இயற்கை யைக் காப்போம் செயற்கை உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம்
2. வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் மிகுந்துள்ளது தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது
குறுவினா
1.பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
பறவைகள் இடம் பெயர்வதற்கான காரணங்கள் :
பறவைகள் உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்
போன்றவற்றிற்காக இடம்பெயர்கின்றனள.
2.வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் :
(i) தலையில் சிறகுகள் வளர்தல்.
(ii) இறகுகளின் நிறம் மாறுதல்.
(iii) உடலில் கற்றையாக முடி வளர்தல்.
சிறுவினா
1.சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக.
(i) சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
(ii) கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
(iii) துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
2.வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
(i) பறவைகள் கண்டம் விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும்
மலைகளையும் கடந்து போகின்றன. குறிப்பிட்ட காலத்திற்குப் பிற்கு புறப்பட்ட
இடத்திற்கே வந்து சேர்கின்றன. பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத்
தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
(ii) சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக