தாய்வீடு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அன்பு சகோதரர் மகேஸ்வரன் அவர்கள் கடந்த வாரம் பள்ளிக்கு வருகை தந்து மூன்று மரக்கன்றுகளை நட்டு விட்டுச் சென்றார். அப்போது சகோதரரிடம் இன்னும் 20 மரங்கள் நம் பள்ளி வளாகத்தில் நடலாம், எங்களுக்கு பழமரங்கள் நட விருப்பமாக உள்ளோம் என்று கூறினேன். உடனடியாக மறுப்பேதும் கூறாமல் அதற்கென்ன பழ மரங்கள் நட்டால் போச்சு.... என்று புன்னகையுடன் கூறிச் சென்றவர் ,இன்று தனது தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி ஆகியோருடன் பள்ளிக்கு வருகை தந்து 15 பழ மரக்கன்றுகளை எம் பள்ளி மாணவ மாணவியரை வைத்து நட வைத்தார்கள். மேலும் பள்ளி வளாகம் மற்றும் மாணவர்களுக்கு எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று மிகவும் மகிழ்வுடன் கூறிச் சென்றார்கள். இன்று பிறந்தநாள் கொண்டாடிய முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி .கோமதி மற்றும் எம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி தங்க தன்ஷிகா ஆகியோர் பழ மரக்கன்றுகளை நட்டார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்களாக எங்களுக்கும் எம் மாணவர்களுக்கும் இன்று அமைந்தது. அன்பு சகோதரர் மகேஸ்வரன் அவர்களுக்கும் அவருடன் வந்த தன்னார்வலர்களுக்கும் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.