பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 10 ஆகஸ்ட், 2024

4 தாவரங்கள் வாழும் உலகம் 6TH SCIENCE

 

4 தாவரங்கள் வாழும் உலகம்


 PDF-DOWNLOAD CLICK HERE

தாவரங்கள் வாழும் உலகம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:


1.குளம் வாழிடத்திற்கு உதாரணம்
அ) கடல்
ஆ) நன்னீர் வாழிடம்
இ) பாலைவனம்
ஈ) மலைகள்
விடை:
ஆ) நன்னீர் வாழிடம்


2.இலைத் துளையின் முக்கிய வேலை ______
அ) நீரைக் கடத்துதல்
ஆ) நீராவிப்போக்கு
இ ஒளிச் சேர்க்கை
ஈ) உறிஞ்சுதல்.
விடை:
இ) ஒளிச் சேர்க்கை


3.நீரை உறிஞ்சும் பகுதி ____ ஆகும்
அ) வேர்
ஆ) தண்டு
இ) இலை
ஈ) பூ
விடை:
அ) வேர்


4.நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்
அ) நீர்
ஆ) நிலம்
இ) பாலைவனம்
ஈ) மலை
விடை:
அ) நீர்

II. சரியா, தவறா – தவறு எனில் சரியான விடையை எழுதுக


1.தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்
விடை:
தவறு
பல்வேறு வளர்சிதை மாற்றங்களைச் செய்வதற்கு தாவரங்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.


2.தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்.
விடை:
தவறு
பசுமையான பாகங்களில் மட்டும் பச்சையம் காணப்படுகிறது.


3.தாவரங்களின் மூன்று பாகங்கள் – வேர், தண்டு, இலைகள்.
விடை:
சரி


4.மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஓர் உதாரணம்
விடை:
தவறு
மலைகள் நில வாழிடத்திற்கு உதாரணமாகும்.


5.வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது.
விடை:
தவறு
முட்கள் பொதுவாக இலையின் மாறுபாடு ஆகும்.


6.பசுந் தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவை.
விடை:
சரி


III. கோடிட்ட இடத்தை நிரப்புக


1.புவி பரப்பில் நீரின் அளவு ………
விடை:
1.70


2.பூமியில் மிகவும் வறண்ட பகுதி ……..
விடை:
பாலைவனங்கள்


3.ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் …….. வேலை
விடை:
வேரின்


4.ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி ………
விடை:
இலைகள்


5.ஆணிவேர்த் தொகுப்பு …… தாவரங்களில் காணப்படுகிறது.
விடை:
இருவித்திலைத்

IV. பொருத்துக



V. தாவரங்களின் பாகங்கள் மற்றும் பணிகளில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.


1.இலைகள் – தண்டு – வேர் – மலர்கள்
விடை:
வேர் – தண்டு – இலைகள் – மலர்கள்



2.நீராவிப்போக்கு – கடத்துதல் – உறிஞ்சுதல் – ஊன்றுதல்
விடை:
ஊன்றுதல் – உறிஞ்சுதல் – கடத்துதல் – நீராவிப்போக்கு

VI. மிகக் குறுகிய வினா.


1.வாழிடத்தை அடிப்படையாகக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.
விடை:
நில வாழிடம் – நீர் வாழிடம் என வகைப்படும்.


2.பாலைவனத் தாவரங்களை அடையாளம் காண்க.
விடை:
சப்பாத்திக்கள்ளி, ஹைடிரில்லா, மா, ரோஜா.
சப்பாத்திக்கள்ளி தாவரங்கள் பாலைவனத்தில் காணப்படுகின்றன. அவை தண்டுகளில் நீரைச் சேமிக்கின்றன.


3.வாழிடம் என்பதை வரையறு.
விடை:
ஒவ்வொரு உயிரினமும், உயிர்வாழவும், இனப்பெருக்கம் செய்யவும், தேவைப்படும் இடமானது அதன் வாழிடம் ஆகும்.
(உ.ம்) நன்னீர் வாழிடம் – ஆறுகள், குளங்கள், குட்டைகள்.


4.இலைக்கும், ஒளிச்சேர்க்கைக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
விடை:
இலைகள் பசுமையாக உள்ளன. அவற்றில் பசுங்கணிகங்கள் காணப்படுகிறது. இவை ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.

VII. குறுகிய வினா.


1.மல்லிகைக் கொடி ஏன் பின்னுகொடி என அழைக்கப்படுகிறது?
விடை:
நலிந்த, மெலிந்த தண்டுடைய தாவரங்கள் தாமாக நிலைநிற்க இயலாது. எனவே அவை ஆதாரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறுகின்றன. உம்) பட்டாணி.


2.ஆணிவேர் மற்றும் சல்லிவேர் தொகுப்புகளை ஒப்பீடு செய்க.
விடை:



3.நிலவாழிடம் மற்றும் நீர் வாழிடத்தை வேறுபடுத்துக.
விடை:



4.உங்களுடைய பள்ளித் தோட்டத்தில் உள்ள தாவரங்களை பட்டியலிடுக.
விடை:
செம்பருத்தி, பெரணிகள், குரோட்டன்கள், ரோஜா, லில்லி, சப்பாத்திக் கள்ளி (கள்ளி வகைகள்), தென்னை மரங்கள், ராயல்பனை, கிளிட்டோரியா, சைகஸ், தங்க அரளி, ஹெலிகோனியா, தக்காளி, கத்தரி, வெண்டை, முதலானவை மாடித் தோட்டத்தில் உள்ளன.


VIII. விரிவான வினா.


5.வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைத் தருக.
விடை:

  1. ஊன்றுதல் – தாவரத்தை பூமியில் நிலை நிறுத்துகிறது.
  2. உறிஞ்சுதல் – மண்ணிலுள்ள நீரையும், கனிமச் சத்துக்களையும் உறிஞ்சி பிற பாகங்களுக்குக் கடத்துகிறது.
  3. சேமிப்பு – சில தாவரங்கள் வேர்களில் உணவைச் சேமிக்கிறது. (எ.கா) கேரட்.

தண்டின் பணிகள்

  • தாங்குதல் – கிளைகளையும், இலைகளையும், மலர்களையும், கனிகளையும் தாங்குகிறது.
  • கடத்தல் – நீரையும் தாது உப்புகளையும் வேர்களிலிருந்து மற்ற பகுதிகளுக்கு மேல் நோக்கிக் கடத்துகிறது.
  • இலைகள் தயாரித்த உணவை மற்ற பகுதிகளுக்குக் கடத்துகிறது.
  • சேமித்தல் – கரும்பு போன்ற சில வகை தண்டுகள் உணவைச் சேமிக்கின்றன.


கொடுக்கப்பட்டுள்ள கருத்துப் படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.




விடை:



மனவரைபடம்



2.1 சிலப்பதிகாரம்-6TH STD TAMIL


 

 2.1 சிலப்பதிகாரம்-6TH STD TAMIL

PDF DOWNLOAD-CLICK HERE
 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.கழுத்தில் சூடுவது …….
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
விடை
அ) தார்


2.கதிரவனின் மற்றொரு பெயர் ………………
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
விடை
ஆ) ஞாயிறு


3.‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
விடை
ஆ) வெண்மை + குடை


4.‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
‘ஈ) பொற்கோ + இட்டு
விடை
அ) பொன் + கோட்டு



5.கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
விடை
இ) கொங்கலர்


6.அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
விடை
ஆ) அவனளிபோல்

நயம் அறிக


1.பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி


2.பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
திங்கள் – கொங்கு
மாமழை – நாம

குறுவினா


1.சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.


2.இயற்கை போற்றத்தக்கது ஏன்?

(i) நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம். இயற்கை என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், மழை இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து உதவுகிறது.
(ii) சூரியன் ஒளியைத் தருவதால்தான் மரங்கள் வளர்கின்றது. இதனால் நமக்கு மழை பொழிகிறது. மழை நமக்கு உணவைக் கொடுக்கும்.
(iii) உணவாகவும் அமையும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே இயற்கை போற்றத்தக்கதாகும்.

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்-7th std

 

அப்படியே நிற்கட்டும் அந்த மரம்


 


 PDF -DOWNLOAD-CLICK HERE

 



 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ….
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
Answer:
ஆ) கோலிக்குண்டு

 

 2.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………………
அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
Answer:
அ) ஒட்டிய பழங்கள்

 3.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா
Answer:
இ) பெயர் + அறியா

 4.
‘மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……..
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
Answer:
ஈ) மனம் + இல்லை

 5.
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Answer:
ஆ) நேற்றிரவு

 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?

நாவல் மரம் ஆறு தலைமுறைகளாய் அங்கு நின்றிருந்தது.

 2.
சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

காக்கை, கிளி, குருவி, மைனா, கிளிகள் மற்றும் பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று ஆகியவை சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவின.

சிறுவினா

 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

ஊரின் வடகோடியில் இருந்த நாவற்பழமரம்கவிஞரின் ஐந்து வயதில் எப்படியிருந்ததோ அப்படியேதான் அவருடைய ஐம்பது வயதைத் தாண்டியும் இருந்தது.

கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட மரம் என்று கவிஞர், தன் அப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்.

அந்த மரத்தில் பச்சைக் காய்கள் நிறம் மாறி செங்காய்த் தோற்றம் ஏற்பட்டவுடன் சிறுவர்களின் மனதில் பரவசம் பொங்கும். பளபளப்பான பச்சை இல்லைகளின் நடுவில், கிளைகளில் கருநீலக் குண்டுகளாய் நாவற்பழங்கள் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும்.

பறவைகள், அணில்கள் மற்றும் காற்று ஆகியவற்றால் உதிர்ந்திடும் பழங்களைப் பொறுக்குவதற்காக சிறுவர் கூட்டம் அலைமோதும் எனக் கவிஞர் நாவல் மரம் பற்றிய தன்னுடைய நினைவுகளைக் கூறுகிறார்.