தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்
யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் (பா.113)
*பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே*
(பா.116)
நீலகேசி - பெயர்க்காரணம்
நீலகேசி என்பது ‘கேசி’ என்று முடியும் பெண்பால் பெயர்களுள் ஒன்று. கேசி அழகிய கூந்தலை உடையவள்; நீலகேசி - அழகிய கருங்கூந்தலை உடையவள் என்பது பொருள்.
தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை
எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல்
கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை
மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல்
கூடாது; பிறர் குற்றங்களை அகற்ற வேண்டும்; முறை தவறி
நடப்பாரைத் திருத்த வேண்டும்; யாவரிடமும் மெய்யான அன்பு
செலுத்த வேண்டும்; மாந்தர்தம் அறியாமை போக்க வேண்டும்
என்று பல உலக நீதிகளை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
ஐம்பெரும் காப்பியங்கள்
- ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் = மயிலைநாதர்
- ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் = கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)
- சிலப்பதிகாரம் = இளங்கோவடிகள்
- மணிமேகலை = சீத்தலைச் சாத்தனார்
- சீவகசிந்தாமணி = திருத்தக்கதேவர்
- வளையாபதி = பெயர் தெரியவில்லை
- குண்டலகேசி = நாதகுத்தனார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டை காப்பியங்கள் எனப்படும்.
- சமணக் காப்பியங்கள் = சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி
- புத்தக் காப்பியங்கள் = மணிமேகலை, குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
- ஐஞ்சிறு காப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- ஐஞ்சிறு காப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
- நாககுமாரகாவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- உதயன குமாரகாவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- யசோதரகாவியம் = வெண்ணாவலூர் உடையார் வேள்
- நீலகேசி = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சூளாமணி = தோலாமொழித்தேவர்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.உடல்நலம் என்பது ……………………… இல்லாமல் வாழ்தல் ஆகும்.
அ) அணி
ஆ) பணி
இ) பிணி
ஈ) மணி
இ) பிணி
2.நீலகேசி கூறும் நோயின் வகைகள் ……………………
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
ஆ) மூன்று
3.‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_ ………………………
அ) இ + யுண்டார்
ஆ) இவ் + உண்டார்
இ) இவை + உண்டார்
ஈ) இவை + யுண்டார்
இ) இவை + உண்டார்
4.தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………
அ) தாம் இனி
ஆ) தாம்மினி
இ) தாமினி
ஈ) தாமனி
இ) தாமினிகுறுவினா
1.நோயின் மூன்று வகைகள் யாவை?- மருந்தினால் நீங்கும் நோய்.
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.
- வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.
2.நீலகேசியில் பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி கூறுகின்றது.
சிறு வினா
1.நோயின் வகைகள் அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
- ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
- மருந்தினால் நீங்கும் நோய்.
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய் மற்றொரு வகை.
- வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தரும் நோய்.
- அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
- இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
- இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
சிந்தனை வினா
1.துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
தருமம் செய்தல், கோபத்தைத் தணித்தல், முயற்சி செய்தல், கல்வி கற்றல், உலக
நடையை அறிந்து நடத்தல், நல்ல நூல்களைப் படித்தல், பொறாமை படாமல் இருத்தல்,
பொய்சாட்சி சொல்லாமல் இருத்தல், இனிமையாகப் பேசுதல், பேராசையைத்
தவிர்த்தல், நட்புடன் பழகுதல், பெரியோர்களை மதித்தல், ஒழுக்கம் தவறாமல்
இருத்தல், நன்றியை மறவாமல் இருத்தல், காலத்தைக் கடைபிடித்தல், களவு
செய்யாதிருத்தல், இழிவானதைச் செய்யாதிருத்தல், இரக்கம் கொள்ளுதல், பொய்
சொல்லாதிருத்தல், ஆணவம் கொள்ளாதிருத்தல், சுறுசுறுப்புடன் இருத்தல்,
உடற்பயிற்சி செய்தல், அதிகாலையில் எழுந்திருத்தல் போன்றவை கைக்கொள்ள
வேண்டிய நற்பண்புகள் ஆகும்.