நம் பள்ளியின் புதிய கட்டிடமான "ஹரிநாராயணன் " திறப்பு விழா ,95 வது ஆண்டு விழா மற்றும் நூலக அறை திறப்புவிழா ஆகியன மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் தலைமை வகித்தார்கள். நம் பள்ளியின் செயலர் திரு. டீ.வி. சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தரைத்தளத்தினை திரு.Dr.ராமசுப்பிரமணியன் அவர்களும் அன்னாரின் சகோதரர் திரு. Dr.அமீர்ஜான் அவர்களும் இணைந்து திறந்து வைத்தார்கள். முதல் தளத்தினை அல்பா கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு.M.H.M. இப்ராஹிம் அவர்கள் திறந்து வைத்தார்கள் . நூலக அறையினை பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி. சு. கல்யாணி M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil அவர்கள் திறந்து வைத்தார்கள். வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் திருஎ .சாம்சன் அவர்கள் சிறப்புரை ஆற்றி போட்டிகளில் கலந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு. S.பிரான்சிஸ் முத்துராஜ் M.A.,M.Ed.,M.Phil.,அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர் .