பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 20 ஜூலை, 2024

மாணவ மாணவிகளுக்குப் பாராட்டு விழா

திருநெல்வேலி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப்  பாராட்டு விழா இன்று அரிகேசநல்லூர் இந்து  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு.ம ராம் சந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இந்திய குத்துச்சண்டை வீரரும்   வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளருமான  திரு. இ . இசக்கி ராஜா., B.E.,M.B.A.,M.Tech.,M.A.B.L(World Cup and Asian Medalist) அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். மேலும் மாணவர்களிடம் தாம்  கடந்து வந்த பாதையை நினைவு கூறினார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் மிகவும் முக்கியம் எனவும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் எப்பொழுதும் போதைப் பழக்கத்துக்கு ஆளாக கூடாது என்றும் சாதி மத பேதங்களைக் கடந்து சுய ஒழுக்கத்துடன் கல்வியை கற்று மேன்மையடைய வேண்டும் என்றும் படிக்கின்ற வயதிலேயே எதிர்காலத்தில் தான் சாதிக்க நினைக்கும் துறையைத்  தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரையாற்றினார்.மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் பட்டதாரி ஆசிரியை திருமதி சு . முத்துச்செல்வி அவர்கள் நன்றியுரை   கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி சு.பேச்சியம்மாள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி.அமுதவல்லி,திருமதி.ஜேஸ் மாலா ,திருமதி.கோமதி,திருமதி. அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் 

 

https://www.hindumiddleschool.me/news