3.4 தலைக்குள் ஒர் உலகம்| எட்டாம்வகுப்பு|தமிழ்|கூடுதல் தகவல்கள்|வினா விடைகள்
மனித மூளை குறித்த தகவல்கள்
மனித மூளை கணினியை விட வேகமானது மற்றும் அது சிக்கல்களை மிகவும் திறமையாக தீர்க்கும் திறன் கொண்டது.
நமது மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.
மனித மூளை ஆக்ஸிஜன் இல்லாமல் 5 முதல் 10 நிமிடங்கள், தண்ணீர் இல்லாமல் 2 நாட்கள், தூக்கம் இல்லாமல் 11 நாட்கள் மற்றும் உணவு இல்லாமல் 20 நாட்கள் வரை உயிர்வாழும்.
மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.
நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.
25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.
எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது.
மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை
மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன.
20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.
வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையதுதான் நமது மூளை என்கிறார்கள்.
நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம்.
நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .
நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.
மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது.
நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.
மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங்கும் செய்ய முடியும்.
நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம்.
நாம் வளர வளர, விஷயங்களை நினைவில் கொள்வது கடினமாகிறது. ஏனென்றால், நமது வயதுக்கு ஏற்ப நமது மூளை மற்றும் நரம்பு செல்கள் சுருங்கி, புதிய சிந்தனைகளை உள்வாங்குவதைத் தடுக்கும் பழைய நினைவுகளை வடிகட்டவும் அகற்றவும் முடியாது.
இடது மற்றும் வலது பக்க மூளை இரண்டும் எப்போதும் ஒன்றாக வேலை செய்கின்றன, அவற்றுக்கிடையே எந்தப் பிரிவும் இல்லை.
கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.கர்ப்ப காலத்தில் மூளையில் உள்ள நியூரான்கள் நிமிடத்திற்கு 200000 நியூரான்களுக்கு மேல் பெருகும்.
நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…
நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.
பாடநூல் வினாக்கள்
1.மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.
முன்னுரை :
உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை; புதிரானவை. அவற்றைப் பற்றிக் காண்போம்.
இடப்பாகக் செயல்:
மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது
வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச்
செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள்
வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின்
அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள்.
இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.
வலப்பாகச் செயல்:
இடது பாதி அண்ணன் என்றால் வலதுபாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான்
நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது,
நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான். வலது பாதி
சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி
ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக்
கலைஞர்களாக, இசைக்கருவிகளைக் கையாளுபவர்களாக, கலைத் திறன்கள்
பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள்
பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப்
படித்தவர்களாகத் திகழ்வர்.
முடிவுரை:
இடதும் வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால்
உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத்
தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.