பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 10 ஆகஸ்ட், 2024

2.1 சிலப்பதிகாரம்-6TH STD TAMIL


 

 2.1 சிலப்பதிகாரம்-6TH STD TAMIL

PDF DOWNLOAD-CLICK HERE
 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.கழுத்தில் சூடுவது …….
அ) தார்
ஆ) கணையாழி
இ) தண்டை
ஈ) மேகலை
விடை
அ) தார்


2.கதிரவனின் மற்றொரு பெயர் ………………
அ) புதன்
ஆ) ஞாயிறு
இ) சந்திரன்
ஈ) செவ்வாய்
விடை
ஆ) ஞாயிறு


3.‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) வெண் + குடை
ஆ) வெண்மை + குடை
இ) வெம் + குடை
ஈ) வெம்மை + குடை
விடை
ஆ) வெண்மை + குடை


4.‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) பொன் + கோட்டு
ஆ) பொற் + கோட்டு
இ) பொண் + கோட்டு
‘ஈ) பொற்கோ + இட்டு
விடை
அ) பொன் + கோட்டு



5.கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) கொங்கு அலர்
ஆ) கொங்அலர்
இ) கொங்கலர்
ஈ) கொங்குலர்
விடை
இ) கொங்கலர்


6.அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………
அ) அவன்அளிபோல்
ஆ) அவனளிபோல்
இ) அவன்வளிபோல்
ஈ) அவனாளிபோல்
விடை
ஆ) அவனளிபோல்

நயம் அறிக


1.பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
மாமழை – மேரு – மேல்
கொங்கு – காவேரி


2.பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
விடை
திங்கள் – கொங்கு
மாமழை – நாம

குறுவினா


1.சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?

சிலப்பதிகாரக் காப்பியம் திங்கள், ஞாயிறு, மாமழை ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.


2.இயற்கை போற்றத்தக்கது ஏன்?

(i) நாம் இயற்கையோடு இயைந்து வாழ்கிறோம். இயற்கை என்று சொல்லக்கூடிய சூரியன், சந்திரன், மழை இவையெல்லாம் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளைக் கொடுத்து உதவுகிறது.
(ii) சூரியன் ஒளியைத் தருவதால்தான் மரங்கள் வளர்கின்றது. இதனால் நமக்கு மழை பொழிகிறது. மழை நமக்கு உணவைக் கொடுக்கும்.
(iii) உணவாகவும் அமையும். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. எனவே இயற்கை போற்றத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக