பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

மூதுரை|ஆறாம்வகுப்பு |தமிழ் |வினா விடைகள்

 

மூதுரை 

 


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் 

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை  கற்றோற்குச்

 சென்ற இடமெல்லாம் சிறப்பு.

 

மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. 

 

ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். சங்க காலம், இடைக்காலம், சோழர் காலம், பிற்காலம் எனப் பல காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஔவையாரும் மூதுரை பாடிய ஔவையாரும் வெவ்வேறு காலத்தவர் ஆவர்.



 

 

 

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.மாணவர்கள் நூல்களை ………….. கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற

இ) மாசற


2.இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்

ஆ) இடம் + எல்லாம்


3.மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற

ஆ) மாசு + அற


4.குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம் இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
 

அ) குற்றமில்லாதவர்



5.சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்பு உடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார் –
ஈ) சிறப்பிடையார்

ஆ) சிறப்புடையார்

குறுவினா


1.கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

(i) மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர்.
(ii) மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

சிறுவினா


1.கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

(i) கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத்தக்கது.
(ii) கல்வி பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.
(iii) கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது.
(iv) அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். மன்னனையும் குறை இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவராகக் கருதப்படுவர்.
(v) மன்னனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிடைக்கும். ஆனால் கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு கிடைக்கும்.



1.கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.

கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகள் :
(i) கல்லாதவர் எவராலும் மதிக்கப்பட மாட்டார். வீட்டில் பெரிய பிள்ளையாக இருந்தாலும் கற்கவில்லையெனில் பெற்றோர் அவனை
ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்.
(ii) நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலாது. எல்லோராலும் இகழப்படுவான்.

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக