பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

காணி நிலம்|பாரதியார்|ஆறாம்வகுப்பு| முதல்பருவம் தமிழ்

 காணி நிலம்

 


 PDF DOWNLOAD-CLICK HERE

 

 


 காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித் தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்கு
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும். – பாரதியார்


 

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.‘கிணறு’ என்பதைக் குறிக்கும் சொல் ………..
அ) ஏரி
ஆ) கேணி
இ) குளம்
ஈ) ஆறு


ஆ) கேணி


2.‘சித்தம்’ என்பதன் பொருள் . ………..
அ) உள்ளம்
ஆ) மணம்
இ) குணம்
ஈ) வனம்

அ) உள்ளம்


3.மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
அ) அடுக்குகள்
ஆ) கூரை
இ) சாளரம்
ஈ) வாயில்

அ) அடுக்குகள்


4.நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நன் + மாடங்கள்
ஆ) நற் + மாடங்கள்
இ) நன்மை + மாடங்கள்
ஈ) நல் + மாடங்கள்

இ) நன்மை + மாடங்கள்


5.நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நிலம் + இடையே
ஆ) நிலத்தின் + இடையே
இ) நிலத்து + இடையே
ஈ) நிலத் + திடையே

ஆ) நிலத்தின் + இடையே



6.முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) முத்துசுடர்
ஆ) முச்சுடர்
இ) முத்துடர்
ஈ) முத்துச்சுடர்

ஈ) முத்துச்சுடர்


7.நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
அ) நிலாஒளி
ஆ) நிலஒளி
இ) நிலாவொளி
ஈ) நிலவுஒளி

இ) நிலாவொளி

பொருத்துக

1. முத்துச்சுடர்போல – மாடங்கள்
2. தூய நிறத்தில் – மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி
விடை :
1. முத்துச்சுடர்போல – நிலாஒளி
2. தூய நிறத்தில் – தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட – தென்றல்

நயம் அறிக


1.காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

காணி – ட்டி
த்தும் – காதில்
கேணி – கீற்று
த்து – க்கத்திலே
முத்துச்சுடர் – முன்பு



2.காணி நிலம் பாடலில் இடம்பெற்ற எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

காணி – கேணி – தூணில்
தென்றல் – முன்பு
முத்து – கத்து
சித்தம் – பத்து

குறுவினா


1.காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

பாரதியார் விரும்பும் மாளிகை :
(i) அழகான தூண்களையும், தூய்மையான நிறமுடைய மாடங்களையும் கொண்டிருக்க வேண்டும்.
(ii) அங்கே நல்ல நீரையுடைய கிணறு இருக்க வேண்டும்.
(iii) அதனருகில் இளநீரையும், கீற்றுகளையும் தரும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் இருக்க வேண்டும் என்று பாரதியார் விரும்புகிறார்.


2.பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

இயற்கையின் மீது அதிக விருப்பம் கொண்டு தன்னுடைய மாளிகையின் அருகில் கிணற்றையும், அதனருகில் இளந்தென்றல் விழக்கூடிய பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்ளையும் வளர்க்க வேண்டும் எனவும், முத்துச்சுடர் போல நிலாவொளி வீசவேண்டும் எனவும், குயில்களின் குரலோசைகளைக் கேட்கவேண்டும் எனவும், பாரதியார் பெரிதும் விரும்புகிறார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக