பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

திருக்குறள்

 திருக்குறள்


 PDF-DOWNLOAD CLICK HERE

 

 


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை

இ) நடுவுநிலைமை


2.பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்

ஆ) கல்லாதவர்


3.வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) வல் + உருவம்
ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம்
ஈ) வ + உருவம்

ஆ) வன்மை + உருவம்


4.நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) நெடுதேர்
ஆ) நெடுத்தேர்
இ) நெடுந்தேர்
ஈ) நெடுமைதேர்

இ) நெடுந்தேர்


5.‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………………
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி

இ) உவமை அணி

குறுவினா


1.சான்றோர்க்கு அழகாவது எது?

துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.


2..பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.


3.‘புலித்தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.


1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

2. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………………….
புலியின்தோல் ……………………. மேய்ந் தற்று.

2. விலங்கொடு ………………….. அனையர் ……………………….
கற்றாரோடு ஏனை யவர்.

1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.

முறைப்படுத்தியது
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.



1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.



2. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.