பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 14 ஆகஸ்ட், 2024

78வது சுதந்திர தின விழா மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்

 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரிகேசவநல்லூர்  இந்து நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்விற்கு முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாணவர்களுக்கான மாறுவேடப்  போட்டியில் மாணவ மாணவிகள் மகாத்மா காந்தியடிகள், முதல் இந்தியா பிரதமர் ஜவஹர்லால் நேரு,  வீர மங்கை வேலுநாச்சியார், சிங்கப்பெண்  குயிலி , ராணி அவந்திபாய் , மகாகவி பாரதியார் ,சட்ட மாமேதை அம்பேத்கர் ,மாவீரன் பூலித்தேவன் ஆகியோரின் வேடமிட்டு அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் வழங்கினார்கள். மேலும் கொடிக் கா த்த குமரன் குறித்த நாடகம் நடைபெற்றது. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு ALL THE CHILDREN  தொண்டு நிறுவனத்தின் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மதன் அவர்கள் பதக்கங்கள்  வழங்கிப்  பாராட்டினார்கள். விழாவில் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனத்  தலைவர் திரு. மகேஸ்வரன்,  திரு முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்








































 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக