படம் இங்கே! பழமொழி எங்கே?
ஐந்தாம் வகுப்பு தமிழ் வினா விடைகள்
கூடுதல் விளக்கங்கள்
பழமொழிகள் என்பவை, நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம்
உணர்ந்து கூறிய மொழிகள். பழங்காலம் முதற்கொண்டே பழமொழிகள்
வழக்கிலிருந்து வருகின்றன. பழமொழி நானூறு என்னும் பெயரிலேயே நீதிநூல்
ஒன்றும் உள்ளது.
யானை வரும் பின்னே! மணியோசை வரும் முன்னே!
இக்கரைக்கு அக்கரை பச்சை
இந்தப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அந்தப் பக்கம் பசுமையாகத் தெரியும். பக்கத்தில் இருப்பதைவிடத் தூரத்தில் இருப்பது சிறப்பாகத் தெரிவது இயல்பு.
ஆடிக்காற்றில் அம்மியும்பறக்கும்.
ஆடியில் வரும் காற்றும், சாரல் மழையும் குளிர்ச்சியை ஏற்படுத்தி, பூமியின் சூட்டைத் தணிக்கும். அதனால், அம்மை கண்டவர்கள் குளுமை அடைந்து, குணம் பெறுவார்கள். ஆடிக்குப் பின் அம்மை நோய் போய்விடும். அதனால்தான் "ஆடிக்காற்றில் அம்மையும் நகரும்" என்றார்கள்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
இதில் வரும் நாலும் என்ற சொல் நாலடியாரையும் இரண்டும் என்ற சொல் திருக்குறளையும் குறிக்கிறது. ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி அளிக்கிறது. அதுபோல் நாலடியாரையும், திருக்குறளையும் கற்றவர்கள் சொல்வன்மையும் உறுதியும் பெற்றவர்கள் ஆகிறார்கள்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
வயலில் விளைந்த நெற்பயிரினை அறுவடை செய்யும்போது, நெற்பயிரின் அடிப்பகுதியில் ஒருசாண் அளவிற்கு விட்டு அறுவடை செய்வர்.
பின் களத்து மேடுகளில் அறுத்த நெற்பயிரிலிருந்து நெல்மணிகள் தனியாக உதிர்ந்து விடுமாறு அடித்து பிரிப்பர். இதற்கு போரடித்தல் என்று பெயர்.
போரடித்து பிரிக்கப்படும் நெல்மணிகளுடன் தூசு, குறைந்த விளைச்சல் கொண்ட நெல்மணிகளான சாவி போன்றவையும் சேர்ந்து இருக்கும்.
போரடித்து வரும் நெல்லை காற்று வீசும்போது அள்ளி தூற்றுவர். இவ்வாறு தூற்றும்போது நல்ல நெல்கள் நேராக கீழேயும், தூசு, பதர் என்று சொல்லப்படும் விளைச்சல் குறைந்த நெல்கள் காற்றின் பிடியில் சிக்கி சற்றுத் தள்ளியும் விழும்.
நல்ல நெல்லினை இம்முறையில் எளிதில் பிரித்து எடுக்கலாம்.
“வாய்ப்புகள் கிடைக்கும்போது அதனை நாம் நமது நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
அகல உழுவதை விட ஆழ உழுவதேமேல்
மதிப்பீடு
அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.
1.மரப்பொந்து இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + பொந்து
ஆ) மர + பொந்து
இ) மரப் + பொந்து
ஈ) மரப்பு + பொந்து
அ) மரம் + பொந்து
2.அக்கரை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அக் + கரை
ஆ) அந்த + கரை
இ) அ + கரை
ஈ) அ + அரை
இ) அ + கரை
3.சூறை + காற்று இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சூறைகாற்று
ஆ) சூற்காற்று
இ) சூறக்காற்று
ஈ) சூறைக்காற்று
ஈ) சூறைக்காற்று
4.கண் + இமைக்கும் இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) கண்ணிமைக்கும்
ஆ) கண் இமைக்கும்
இ) கண்மைக்கும்
ஈ) கண்ண மைக்கும்
அ) கண்ணிமைக்கும்
5.நானூறு இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) நான்கு + நூறு
ஆ) நா + நூறு
இ) நான்கு + னூறு
ஈ) நான் + நூறு
அ) நான்கு + நூறு
ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) மணியோசை – …………………… + …………………………..
ஆ) தேனிசை – …………………… + …………………………..
அ) மணியோசை – மணி + ஓசை
ஆ) தேனிசை – தேன் + இசை
இ. பொருத்தமான சொல்லைக் கொண்டு பழமொழியை நிறைவு செய்க:
புத்தி, அடி, காலை, பயிர், வளையாதது
1. யானைக்கும் ………………. சறுக்கும்.
அடி
2. விளையும் ……………….. முளையிலே தெரியும்.
பயிர்
3. ஐந்தில் …………….. ஐம்பதில் வளையாது.
வளையாதது
4. ஆத்திரக்காரனுக்குப் ………………. மட்டு.
புத்தி
5. ஆழம் தெரியாமல் ….. …………….. விடாதே.
காலை
ஈ. சொல்லை இடம்மாற்றிப் பழமொழியைக் கண்டுபிடிக்க.
1.உழுவதை அகல விட உழு ஆழ……………………………..
அகல உழுவதை விட ஆழ உழு. வளையாதது
2.வளையாது ஐம்பதில் ஐந்தில்……………………………..
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
3.மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு அமிழ்தமும்……………………………..
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.
4.குற்றம் சுற்றம் பார்க்கின் இல்லை……………………………..
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கல்வி நாள்சில……………………………..
கல்வி கரையில கற்பவர் நாள்சில.
உ. வினாக்களுக்கு விடையளிக்க.
1.பழமொழி என்பது யாது?
நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து கூறிய வார்த்தைகளே பழமொழிகள் ஆகும்.
2.கிளி, யாருக்கு மாம்பழம் தருவதாகக் கூறியது?
செல்லம்மாவுக்கு மாம்பழம் தருவதாகக் கிளி கூறியது.
3.கிளியைப் ‘பழமொழிக் கிளி’ என அழைக்கக் காரணம் என்ன?
மாங்காய் காய்க்கும் பருவத்தில் தோப்பிற்கு வரும் சிறுவர்களிடம் ஒரு படத்தை
மரப்பொந்திலிருந்து எடுத்துக்காட்டும். அந்தப் படம் உணர்த்தும் பழமொழியைச்
சிறுவர்கள் கூறிவிட்டால் அவர்களுக்கு ஒரு மாங்காய் பறித்துப் போடும்.
அதனால் அதைப் ‘பழமொழிக் கிளி’ என்று அழைக்கின்றனர்.
4.இப்பாடத்தில் நீ அறிந்து கொண்ட பழமொழிகளைப் பட்டியலிடுக.
- யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
- இக்கரைக்கு அக்கரை பச்சை.
- ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி.
- காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
- அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக