பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 27 ஜனவரி, 2026

குடியரசு தின விழா – திருக்குறள் போட்டி

 குடியரசு தின விழா – திருக்குறள் போட்டி 

நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக,

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்காக நடத்தப்பட்ட

திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற 35 மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயலர் திரு. T .V .சுப்பிரமணியன் அவர்கள் 

சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கினார்கள் . 🎉📜💰

இந்த பரிசுகள்,

திரு. ரவிக்குமார் அவர்களின் பெற்றோர்

திரு. வெங்கட்ராமன் – திருமதி. பார்வதி அவர்களின் இனிய நினைவாக வழங்கப்பட்டவை.

பரிசளித்து மாணவர்களை உற்சாகப்படுத்திய

திரு. ரவிக்குமார் அவர்களுக்கு

பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏














2026 ஆம் ஆண்டின் இரண்டாவது அங்கீகாரம்

  2026 ஆம் ஆண்டின் இரண்டாவது அங்கீகாரம்

🏆
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளிக்கு....
சமூக பங்களிப்புடன் பள்ளியை மேம்படுத்தியதற்காக
சிறந்த பள்ளிக்கான விருது 🏅
கோயம்புத்தூர் AJK கல்லூரியில் நடைபெற்ற விழாவில்,
மாண்புமிகு டாக்டர் வி. நாராயணன்
(தலைவர் – விண்வெளி ஆணையம் / தலைவர் – இஸ்ரோ, புது டெல்லி)
அவர்களின் திருக்கரங்களால் இந்த பெருமைமிகு விருதினை பெற்றுக் கொண்டேன்.
இந்நிகழ்வில்
டாக்டர் .ஜோ கே. கிழக்கூடன்
(முதன்மை விஞ்ஞானி & தலைவர், CMFRI, விசாகப்பட்டினம்)
அவர்களும் இணைந்து விருது வழங்கினர்.
இந்த சாதனைக்கு காரணமாக இருந்த எம் பள்ளியின் புரவலர்கள், பள்ளி செயலர், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏
பள்ளியின் முன்னேற்றப் பயணம் தொடரும்… 🌱📚





ஞாயிறு, 4 ஜனவரி, 2026

சிறந்த பள்ளிக்கான விருது

 


திருநெல்வேலி மாவட்டக் கல்வித்துறைகே நடத்திய ஆசிரியர்களைக்கொண்டாடுவோம் நிகழ்ச்சி திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.2024-25 ம்  கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் சிறந்த  பள்ளிகளுக்கான விருதுகளை  மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார்கள் .திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதிற்கு அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. ..திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதினை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் திருகரங்களால் பெற்றுக் கொண்ட மகிழ்வான தருணம். இந்த விருதினை வழங்கிய பள்ளிக்கல்வித்துறைக்கும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வரும் எம் பள்ளியின் புரவலர்களுக்கும் பள்ளிக்காக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக மிகவும் அயராது உழைத்து வரும் பள்ளி செயலருக்கும் எனது அன்பு ஆசிரிய சகோதரிகளுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்