பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 6 நவம்பர், 2026

தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் வகையில் மாணவர் மன்றக் கூட்டம்!

 தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் வகையில் மாணவர் மன்றக் கூட்டம்!


இந்து நடுநிலைப்பள்ளி, அரிகேசவநல்லூரில் ‘நிமிர்’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது!


அரிகேசவநல்லூர், நவம்பர் 5:


திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் நோக்கில், ‘நிமிர் – தலைமைத்துவம்: மாற்றத்திற்கான முதல் படி’ என்ற தலைப்பில் மாணவர் மன்றக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சியில் இறைவணக்கப் பாடலை மாணவி இன்பமுகிலா பாடினார். ஐந்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நோக்கம் மற்றும் தலைப்பின் முக்கியத்துவம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. ராம்சந்தர் விளக்கிப் பேசினார்.


தொடர்ந்து, மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 13 மாணவர்கள் தலைமைத்துவத்தின் பல்வேறு பண்புகள் குறித்துப் பேசினர்.


ஆறாம் வகுப்பு மாணவிகள் பாரதி (சுயக்கட்டுப்பாடு), இசைசக்தி (பிறருக்கு மதிப்பளித்தல்), பிருந்தா (விடாமுயற்சி), காயத்ரி யாகினி (மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுதல்) ஆகியோரும், ஏழாம் வகுப்பு மாணவர்கள் அருண்ஸ்ரீ (தன்னம்பிக்கை), வெற்றிச்செல்வி (பொறுப்பேற்றல்), பானுமதி (குழுவாகச் செயல்படுதல்), ராமலட்சுமி (சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல்), ரேணுகா (உணர்வுகளைக் கையாளுதல்), சாதனா (நல்ல தாக்கத்தை ஏற்படுத்துதல்), சிவஜோதி (இலக்கை நிர்ணயித்தல்) ஆகியோரும் உரையாற்றினர்.


எட்டாம் வகுப்பு மாணவர்கள் இசக்கி பாண்டி நவீன் (சரியான முடிவெடுத்தல்), கார்த்திக் சரவணன் (தெளிவாகப் பேசுதல்) ஆகியோர் தங்களது கருத்துகளைச் சிறப்பாக எடுத்துரைத்தனர்.


சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வருவாய் ஆய்வாளர் திருமதி கோமதி கிருஷ்ணமூர்த்தி அவர்களை ஆசிரியை திருமதி ஜேஸ்மாலா மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, தலைமைத்துவத்தின் அவசியம், ஒரு சிறந்த தலைவருக்குத் தேவையான பண்புகள், மாணவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் தலைமைத்துவத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்து திருமதி கோமதி கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வில் All the Children Trust அமைப்பின் சார்பில் திரு. மதன் மற்றும் பாப்பாக்குடி நியூ லைப் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் திரு. பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியில் தலைமைத்துவத் தலைப்புகளில் உரையாற்றிய அனைத்து மாணவர்களுக்கும் All the Children Trust அமைப்பின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.


நிறைவாக ஆசிரியை திருமதி முத்துச்செல்வி நன்றியுரையாற்றினார்.


மாணவர்களின் பேச்சாற்றல், தன்னம்பிக்கை, சிந்தனைத்திறன் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்தும் பயனுள்ள நிகழ்வாக இம்மாணவர் மன்றக் கூட்டம் அமைந்தது.


வெள்ளி, 30 அக்டோபர், 2026

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளிக்கு Vivo நிறுவனம் சார்பில் இன்டராக்டிவ் ஸ்மார்ட் பேனல் வழங்கல்

 

திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (CSR Fund) கீழ் இன்டராக்டிவ் ஸ்மார்ட் பேனல் வழங்கும் நிகழ்ச்சி இன்று (29.10.2026) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


Vivo மொபைல் நிறுவனத்தின் தமிழக விநியோகஸ்தரான Fang Technology Pvt. Ltd. நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட் பேனல் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு பள்ளி ஆசிரியை திருமதி. ஜேஸ்மாலா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.


இதில் சிறப்பு விருந்தினர்களாக Fang Technology நிறுவனத்தின் கிளை மேலாளர் திரு. முகேஷ் மணிகண்டன், மண்டல விற்பனை மேலாளர் திரு. ஹுசைனி, மனிதவளத்துறை மேலாளர் திரு. ஆறுமுகம், வட்டார மேலாளர்கள் திரு. தீபக் மற்றும் திரு. காளிதாஸ், குழுத் தலைவர் திரு. மாரி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அவர்களிடமிருந்து பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ராம்சந்தர் அவர்கள் இன்டராக்டிவ் பேனலை பெற்றுக் கொண்டார்.


இறுதியில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்துசெல்வி அவர்கள் நன்றியுரை கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.