திருநெல்வேலி மாவட்டக் கல்வித்துறைகே நடத்திய ஆசிரியர்களைக்கொண்டாடுவோம் நிகழ்ச்சி திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.2024-25 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார்கள் .திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதிற்கு அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. ..திருநெல்வேலி மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதினை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் திருகரங்களால் பெற்றுக் கொண்ட மகிழ்வான தருணம். இந்த விருதினை வழங்கிய பள்ளிக்கல்வித்துறைக்கும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி வரும் எம் பள்ளியின் புரவலர்களுக்கும் பள்ளிக்காக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக மிகவும் அயராது உழைத்து வரும் பள்ளி செயலருக்கும் எனது அன்பு ஆசிரிய சகோதரிகளுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்
