குடியரசு தின விழா – திருக்குறள் போட்டி
நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் ஒரு பகுதியாக,
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்காக நடத்தப்பட்ட
திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற 35 மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயலர் திரு. T .V .சுப்பிரமணியன் அவர்கள்
சான்றிதழ்களும் பணப்பரிசுகளும் வழங்கினார்கள் . 🎉📜💰
இந்த பரிசுகள்,
திரு. ரவிக்குமார் அவர்களின் பெற்றோர்
திரு. வெங்கட்ராமன் – திருமதி. பார்வதி அவர்களின் இனிய நினைவாக வழங்கப்பட்டவை.
பரிசளித்து மாணவர்களை உற்சாகப்படுத்திய
திரு. ரவிக்குமார் அவர்களுக்கு
பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏















