பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 14 ஜூலை, 2023

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM )

 திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்  மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM )

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி  ஆர் (MANGO VR )-உடன் இணைந்து  மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM ) இன்று ஆரம்பிக்கப்பட்டது . இதன் மூலம் மாணவர்கள் தங்களின் பாடப்பொருளினை நேரில் பார்த்த உணர்வுடன் பயில்வார்கள் . இன்று மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சிநிலையத்தினை  மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM )மூலம் கண்டுகளித்தனர் . நேரில் விண்வெளி ஆராய்ச்சிநிலையத்திற்குள்  இருந்தால் அதனுள் ஏற்படும்ஒலிகளுடன்  உள்ளே நாம் இருக்கும் உணர்வினை ஏற்படுத்தியது. இன்று ஒருவகுப்பறை.......இன்னும் சில நாட்களில் அனைத்து வகுப்பறைகளுக்கும் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY  CLASSROOM )மேங்கோ வி  ஆர் (MANGO VR )-உடன் இணைந்து  ஆரம்பிக்கப்படவுள்ளது .திரு .கைலாஷ் ஜீவன், டெர்ஸ்பைட் டெக்னாலஜிஸ் LLP - நிறுவனர் மற்றும் CEO,  டெர்ஸ்பைட் டெக்னாலஜிஸ் எல்எல்பி  இணை நிறுவனர் திரு முகமது ஹனிஃபா ரஷிக் மற்றும் திரு. அர்ஜுன்,திரு.சூர்யா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்
















வெள்ளி, 30 ஜூன், 2023

திறன் வளர்ப்புப்பயிற்சி- இளம் சாதனையாளர் ஹசானா பேகம்

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற திறன் வளர்ப்புப்பயிற்சியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவியு ம் ,TeenVisor  ஸ்டார்ட் அப் கம்பெனியின் நிறுவனருமான  இளம் சாதனையாளர் ஹசானா பேகம்   கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார் . டீன் ஏஜ் மாணவ மாணவிகளின் லட்சியம் மற்றும் சாதனைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அரசின் புத்தாக்க நிறுவனமான ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து மாணவர்களிடம்  விளக்கிக்கூறினார். விழாவில் TeenVisor  நிறுவனத்தின் குழுவினரும்,Crazy Cocunut நிறுவனர் அர்ஜுன் அவர்களும் மாணவர்களுடன் கலந்துரையாடினர் 









வியாழன், 18 மே, 2023

அடிப்படை ரோபோடிக்ஸ் வடிவமைப்புப் பயிற்சி

  அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் அடிப்படை   ரோபோடிக்ஸ் வடிவமைப்புப்  பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. பயிற்சியினை  திரு.P .முத்துவிஸ்வநாதன் D.E.C.E.,M.E.,M.A., அவர்கள் நடத்தினார்கள் . அன்னாருக்குத்துணையாக அவருடைய மாணவிகள் செல்வி.சுபஸ்ரீ,செல்வி.சூர்யா,செல்வி.கிருஷ்ணப்ரியா ,செல்வி.கலைச்செல்வி,செல்வி.சவிந்தனாதேவி,செல்வி.செல்வி.ஆதிலட்சுமி,  செல்வி .சுபிட்ஷா ஸ்ரீ ஆகியோர்  மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பற்றிய அறிமுகமும், சிறு ரோபோக்களை செய்து காட்டியும் , மாணவர்களை  சிறு ரோபோக்களை உருவாக்கவும் பயிற்சியளித்தனர். மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாகவும், ஆர்வமாகவும்  கலந்து கொண்டனர்.நிகழ்விற்கான  ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர் 








செவ்வாய், 16 மே, 2023

சம்பூர்ண சிக் ஷா -ஆங்கிலப்பேச்சுப்பயிற்சி

 மும்பையில் உள்ள கல்விக்கான தன்னார்வ  தொண்டு நிறுவனமான  சம்பூர்ண சிக் ஷா   நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு  ஜூன் மாதம் முதல் ஆங்கிலப்பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளார்கள் ... அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த இணைய வழி க்கூட்டம்   இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன்  திரு.வெங்கடராமன்    சம்பூர்ண சிக் ஷா திருமதி.புஷ்பா மற்றும்  திருமதி.ரேகா மற்றும் இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.வரும் ஜூன் முதல் வாரம் முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்