எம் பள்ளி தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தமைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்திய பாப்பாக்குடி சரக தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி க்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம் .
பக்கங்கள்
புதன், 8 செப்டம்பர், 2021
தமிழக ஆசிரியர் கூட்டணிக்கு நன்றி
எம் பள்ளி தலைமையாசிரியர் திரு. ம. ராம் சந்தர் அவர்களுக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்தமைக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்திய தமிழக ஆசிரியர் கூட்டணி சாம் சார் அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்
செவ்வாய், 7 செப்டம்பர், 2021
தலைமையாசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா
2021ம் ஆண்டிற்கான தமிழக அரசு கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது பெற்றமைக்காக அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் அவர்களுக்கு பள்ளியில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது . வீழாவிற்கு பள்ளி செயலர் திரு. டி.வி .சுப்பிரமணியன் அவர்கள் தலைமைவகித்தார்கள் . ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு. S .S . ரெங்கன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி வரவேற்புரை யாற்றினார் . பள்ளி செயலர் செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் அவர்கள் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள் . இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் திரு ம . ராம் சந்தர் தான் பெற்ற விருது தொகையான ரூபாய் 10000/-த்தினை பள்ளியின் வளர்ச்சி நிதிக்கு அளித்து ஏற் பு ரையாற்றினார்கள் .இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் குப்புசாமி, அமுதவல்லி, டேக் வொண்டோ பயிற்சியாளர் திரு. பாரதிராஜா, கண்டப்பட்டி மனோகரன், பாலமுரளி ,அம்பை சபரி ஜெராக்ஸ் சட்டநாதன் , வீரவநல்லூர் சந்தோஷ் பர் னி ச்சர் ஐயப்பன் ,பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.சுப்புலட்சுமி ராம்சந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .ஆசிரியை திருமதி. ஜேஸ் மாலா நன்றி கூறினார்கள் விழாவில் ஆசிரியர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
LJK- அன்புக்கரங்கள் அறக்கட்டளை-வாழ்த்து
தகவல் தொழிற்நுட்ப அணி,முகநூல் நண்பர்கள் குழு :-
திரு. டேவிட்
திரு. மாவடி பிராங்ளின்
திரு.டேனியல் ஆசிர்
திரு. பச்சிராஜன்











