பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 7 செப்டம்பர், 2024

3.4 தலைக்குள் ஒர் உலகம்| எட்டாம்வகுப்பு|தமிழ்|கூடுதல் தகவல்கள்|வினா விடைகள்

 

 


3.4 தலைக்குள் ஒர் உலகம்| எட்டாம்வகுப்பு|தமிழ்|கூடுதல் தகவல்கள்|வினா விடைகள்

மனித மூளை குறித்த  தகவல்கள்

மனித மூளை கணினியை விட வேகமானது மற்றும் அது சிக்கல்களை மிகவும் திறமையாக தீர்க்கும் திறன் கொண்டது.


 

  நமது  மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.

மனித மூளை ஆக்ஸிஜன் இல்லாமல் 5 முதல் 10 நிமிடங்கள், தண்ணீர் இல்லாமல் 2 நாட்கள், தூக்கம் இல்லாமல் 11 நாட்கள் மற்றும் உணவு இல்லாமல் 20 நாட்கள் வரை உயிர்வாழும்.



  மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.


  நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.


 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும். 


 

  எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது. 


 

  மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை


 

   மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன. 

   20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும். 

 
   வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையதுதான் நமது மூளை என்கிறார்கள்.      

நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம். 

 நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .

 நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.

மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது. 


 

நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.

 
 மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங்கும் செய்ய முடியும். 

நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம். 

 

நாம் வளர வளர, விஷயங்களை நினைவில் கொள்வது கடினமாகிறது. ஏனென்றால், நமது வயதுக்கு ஏற்ப நமது மூளை மற்றும் நரம்பு செல்கள் சுருங்கி, புதிய சிந்தனைகளை உள்வாங்குவதைத் தடுக்கும் பழைய நினைவுகளை வடிகட்டவும் அகற்றவும் முடியாது.

இடது மற்றும் வலது பக்க மூளை இரண்டும் எப்போதும் ஒன்றாக வேலை செய்கின்றன, அவற்றுக்கிடையே எந்தப் பிரிவும் இல்லை.

  
கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.கர்ப்ப காலத்தில் மூளையில் உள்ள நியூரான்கள் நிமிடத்திற்கு 200000 நியூரான்களுக்கு மேல் பெருகும்.

நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…

நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.    

பாடநூல் வினாக்கள்


1.மூளையின் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள் பற்றித் தொகுத்து எழுதுக.

முன்னுரை :
உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளைதான். அதன் செயல்பாடுகள் விந்தையானவை; புதிரானவை. அவற்றைப் பற்றிக் காண்போம்.

இடப்பாகக் செயல்:
மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இட-வல மாற்றம் நிகழ்கிறது. அதாவது வலப்பக்கச் செய்திகள் மூளையின் இடப்பக்கப் பகுதிக்கும், இடப்பக்கச் செய்திகள் வலப்பக்கப் பகுதிக்கும் செல்கின்றன. நம்மில் பெரும்பாலானவர்கள் வலது கைக்காரர்களாக இருப்பதற்குக் காரணம் நம் மூளையின் இடது பகுதியின் அதிகப்படியான பாதிப்பினால்தான் என்று கூறுவார்கள்.

இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.


வலப்பாகச் செயல்:
இடது பாதி அண்ணன் என்றால் வலதுபாதி தம்பி போன்றது. இந்தப் பாதியால்தான் நாம் வடிவங்களை உணர்கிறோம். கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம். வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் நடிகர்களாக, பாடகர்களாக, நடனக் கலைஞர்களாக, இசைக்கருவிகளைக் கையாளுபவர்களாக, கலைத் திறன்கள் பெற்றவர்களாகத் திகழ்வர். இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பவர்கள் பட்டயக் கணக்கர்களாக, கணக்கு ஆசிரியர்களாக, இந்திய ஆட்சிப் பணிக்குப் படித்தவர்களாகத் திகழ்வர்.

முடிவுரை:
இடதும் வலதும் கலந்து இருப்பவர்களும் உண்டு. நன்முறையில் கல்வி கற்றால் உடலியக்கம் மற்றும் மன இயக்கத்திற்குக் காரணமான மூளை, நம் செயல்பாடுகளைத் தூண்டி நம்மை உயர்வடையச் செய்யும்.

 

   

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

2.6 திருக்குறள்|ஏழாம்வகுப்பு | தமிழ்| வினா விடைகள்

 


2.6 திருக்குறள்

அழுக்காறாமை

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை

 

புறங்கூறாமை

3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

எதிரே நின்று கண்ணோ‌ட்டம் இல்லாமல் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.

4. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

அருளுடைமை

5. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. 

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

6. வலியார்முன் தன்னை நினைக்காதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

வாய்மை

7. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.


வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச்
கூறுதல் ஆகும்.

8. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


  ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால்
அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

9. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
  உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில்
எல்லாம் இருப்பவர் ஆவார்.

இறைமாட்சி

10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயலாகும்.

 


 

 

 

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.வாய்மை எனப்படுவது.
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்

ஆ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்


2.……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்ன ன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
 

ஈ) பொறாமை உள்ளவன்



3.‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பொரு + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்

இ) பொருள் + செல்வம்


4.‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) யா + எனின்
ஆ) யாது + தெனின்
இ) யா + தெனின்
ஈ) யாது + எனின்

ஈ) யாது + எனின்


5.தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……..
அ) தன் நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு

ஆ) தன்னெஞ்சு



6.தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) தீதுண்டோ
ஆ) தீது உண்டோ
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ

அ) தீதுண்டோ

சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.

1. பொருள் வரும் வழிகளை அறிதல்
2. பொருள்களைச் சேர்த்தல்
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.


குறுவினா


1.எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?

(i) ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக் கூடாது.
(ii) அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.


2.வாழும் நெறி யாது?

ஒருவர் தன் நெஞ்சில் பொறாமை இல்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.


3.உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?

உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர்  ஆவார்.


கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க


 


1) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் 

 செல்வத்துள் எல்லாம் தலை.


2) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

  பூரியார் கண்ணும் உள.

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த  தக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள்  எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

2.5 நால்வகைக் குறுக்கங்கள்|ஏழாம்வகுப்பு | தமிழ்| வினா விடைகள்

 

2.5 நால்வகைக் குறுக்கங்கள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.‘வேட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ………
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு

ஆ) ஒன்று


2.மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல் .
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விழுந்தது
ஈ) பணம் கிடைத்தது

ஈ) பணம் கிடைத்தது


3.சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..
அ) ஐகாரக் குறுக்கம்
ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்

ஆ) ஔகாரக் குறுக்கம்

குறுவினா


1.ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

ஒள, வௌ என ஒளகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.


2.சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Answer:

  • ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
  • ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.


3.மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

மகரக்குறுக்கம் என்பதன் விளக்கம் :

(i) மகரமெய் (ம்) 1/2 மாத்திரை அளவுடையது.
(ii) இம் மகர மெய்ண கர, னகர அதாவது ண, ன மெய்களின் பின்னும் வகரத்திற்கும்
அதாவது ‘வ’ என்னும் எழுத்திற்கு முன்னும் வரும்போது தன் 1/2 மாத்திரை அளவிலிருந்து குறைந்து 1/4 மாத்திரை அளவில் ஒலிக்கும். இதற்கு மகரக்குறுக்கம் என்று பெயர்.

எடுத்துக்காட்டு : மருண்ம், போனம், தரும் வளவன், பெரும் வள்ளல் ஆகியவை கால் மாத்திரை அளவில் ஒலிப்பன.

கற்பவை கற்றபின்


1.ஐகார, ஔகார, மகர, ஆய்தக் குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.

(i) ஐகாரக்குறுக்கம் :
வையம், ம்பது, ந்து, சமையல், தலைவன், வளையல், பறவை, கடலை, திண்ணை

(ii) ஔகாரக்குறுக்கம் : ஔவை, வௌவால்

(iii) மகரக் குறுக்கம் :
வரும் வண்டி, போண்ம்
வலம் வந்தான், மருண்ம்

(iv) ஆய்தக்குறுக்கம் :
முள் + தீது – முஃடீது.
கல் + தீது – கஃறீது

 



புதன், 28 ஆகஸ்ட், 2024

எட்டாம் வகுப்பு|இயல் மூன்று|தமிழர் மருத்துவம்|மதிப்பீடு|வினா விடைகள்

தமிழர் மருத்துவம்

வினா விடைகள்  எட்டாம் வகுப்பு 




  

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ……………… பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை

அ) தாவரங்களை


2.தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………………. நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்

இ) உணவின்



3.உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ………….
அ) தலைவலி
ஆ) காய்ச்சல்
இ) புற்றுநோய்
ஈ) இரத்தக்கொதிப்பு
Answer:
ஈ) இரத்தக்கொதிப்பு

Question 4.
சமையலறையில் செலவிடும் நேரம் ………… செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வாழ்வுக்காக
ஈ) உணவுக்காக

இ) நல்வாழ்வுக்காக

குறுவினா


1.மருத்துவம் எப்போது தொடங்கியது?

மருத்துவத்தின் தொடக்கம் :
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.


2.நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை :
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.

எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.


3.தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

வேர், தழை போன்ற தாவர உறுப்புகளும் தாதுப் பொருட்களும் உலோகமும் தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவனவாகும்.

சிறுவினா


1.நோய்கள் பெருகக் காரணம் என்ன?

நோய்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் :
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.


சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ண மும் மனஅழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும்.

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக

அறிவியல்  அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.


2.பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் :
(i) நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

(ii) சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

(iii) விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

(iv) எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(v) கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

(vi) இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

(vii) உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடுவினா


1.தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக

மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை :
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்த விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர். அத்தகைய மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை மூலம் அறியலாம்.

தொடக்கக் காலத்தில் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். தமிழர் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.

மருத்துவ முறைகள் :
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் மருத்துவமுறைகள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்துள்ளது.

தமிழர் மருத்துவம் பின்தங்கியதும் மறுமலர்ச்சி அடைந்ததும் :
ஆங்கிலேயரின் வருகையால் நவீன மருத்துவம் தலை தூக்கியது. இம்மருத்துவம் துரிதமாகச் சில நோய்களைத் தீர்த்தன. அதனால் தமிழர் மருத்துவம் பின்தங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய நோய்களுக்குத் தீர்வு காண இரசாயன மருந்துகள் போதாது என்றும், இதனுடன் உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தனர். மேலும் இம்மருத்துவமுறை பக்கவிளைவுகள் அற்றது என்பதாலும் மறுமலர்ச்சி அடைந்தது.

சித்த மருத்துவ மருந்துப் பொருள்கள் :
வேர், தழையால் குணமாகாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர். மேலும் ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். நோயாளியின் வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப் போக்கு மரபுவழி எப்படிப்பட்டது என்பனவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளித்தது தமிழர் மருத்துவம்.

மருத்துவத்தில் பக்க விளைவுகள் :
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவில், எந்தத் துணை மருந்துடன் கொடுத்தால் பக்க விளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர்.

தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :
தனித்துவமான பார்வை தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு. சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

முடிவுரை :
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கும் தமிழ்மருத்துவமுறையை நாமும் பின்பற்றி நோயின்றி வாழலாம்.