பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 8 ஜூலை, 2019

வாழ்த்துகிறோம்...

கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய   Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI)பயிற்சியில்  இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்கள் சமர்ப்பித்த கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.  அன்னார்  வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை  அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது  பெற இருக்கும் எம் பள்ளி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களை பள்ளியின் சார்பில் வாழ்த்துகிறோம்.

திங்கள், 3 ஜூன், 2019

விதைகளுடன் வரவேற்பு

2019-20ம்  கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை  அன்பு சகோதரர் திரு. ரவி சொக்கலிங்கம் அவர்கள் வழங்கிய விதை பென்சில்களைக் கொடுத்து பழைய மாணவர்கள் வரவேற்றனர் ..
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப்போல இந்த ஆண்டும் எங்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இன்று வழங்கப்பபட்ட விதைகள் விருட்சமாவதைப்போல நம் பள்ளியும் நிச்சயமாக மிகப்பெரிய பள்ளியாக மாறும். எங்களால் முடியும் ...






வியாழன், 11 ஏப்ரல், 2019

புதிய கட்டிடடப்பணி- நன்றி

புதிய கட்டிடடப்பணி மிக விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கிராமத்துப் பள்ளி அனைத்து நவீன வசதிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருப்பதன் பின்புலத்தில்  உள்ள நல் உள்ளம் படைத்த பெரியோர்களின் உதவிதான் காரணம் . புதிய கட்டிடத்திற்கு ஆகும் செலவு ரூபாய் 10 லட்சம் . முதலில் நான் தருகிறேன் என்று ரூபாய் 50000/- அளித்த எங்கள் அன்பு சகோதரர் திரு.M.H.M. இப்ராஹிம் (அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளை )அவர்கள்,,ரூபாய்  3,50,000/- அளித்த எங்கள் அரிகேசவநல்லூர் மண்ணின் மைந்தர் திரு. ராமசுப்பிரமணியன்,திருமதி. நந்தினி ராமசுப்பிரமணியன் அவர்கள் , ரூபாய் 1,00,000/- அளித்த எம் பள்ளி செயலர் திரு. டி .வி .சுப்பிரமணியன் அவர்கள் ,ரூபாய் 20,000/- அளித்த எங்கள் பள்ளி ஆசிரியர் திரு.ரெங்கன் அவர்கள், ரூபாய் 35000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி . அமுதவல்லி அவர்கள் ,ரூபாய் 10000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி . அமுதவல்லி அவர்களின்  கணவர் திரு. குப்புசாமி அவர்கள் , ரூபாய் 25000/- அளித்த எம் பள்ளி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி அவர்கள்,ரூபாய் 20000/- அளித்த  எம் பள்ளி ஆசிரியை திருமதி .ஜேஸ் மாலா அவர்கள் ,ரூபாய் 20000/- அளித்த செல்வி. தீபா அவர்கள், ரூபாய் 5000/- அளித்த திரு. ராஜாமணி அவர்கள் , எம்  பள்ளி  தலைமையாசிரியர் திரு . ராம் சந்தர்  ரூபாய் 30000,ரூபாய் 10000/- அளித்த திரு. பாலன் அவர்கள் ....எங்களது கனவினை நனவாக்கிய இவர்களுக்கும் , இன்னும் உதவி செய்பவர்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது."