பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

திருக்கேதாரம் எட்டாம் வகுப்பு தமிழ்

 திருக்கேதாரம்  எட்டாம் வகுப்பு  தமிழ் 



 

 தேவாரம் 

 


தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

சுந்தரர் தேவாரம்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம்..இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன.அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற இருவரான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.



தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.


திருஞானசம்பந்தர் :

  • இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.
  • ஊர் – சீர்காழி

தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.

சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.

திருநாவுக்கரசர் :

  • இயற்பெயர் – மருள்நீக்கியார்
  • சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்
  • பெற்றோர் – புகழனார், மாதினியார்.
  • தமக்கை – திலகவதியார்
  • பிறந்த ஊர் – திருவாமூர்

இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுந்தரர் :

  • பிறந்த ஊர் – திருநாவலூர்
  • பெற்றோர் – சடையனார், இசைஞானியார்.
  • இயற்பெயர் – நம்பியாரூரர்
  • சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர்.

இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.காட்டிலிருந்து வந்த …………………… கரும்பைத் தின்றன.
அ) முகில்கள்
ஆ) முழவுகள்
இ) வேழங்கள்
ஈ) வேய்கள்

இ) வேழங்கள்


2.‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கனகச் + சுனை
ஆ) கனக + சுனை
இ) கனகம் + சுனை
ஈ) கனம் + சுனை

இ) கனகம் + சுனை


3.முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) முழவுதிர
ஆ) முழவுதிரை
இ) முழவதிர
ஈ) முழவு அதிர

இ) முழவதிர

குறுவினா


1.தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்.

சிறு வினா


1.திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது, அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
  • கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன் வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.
  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது தோன்றும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
  • இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக