பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 18 அக்டோபர், 2024

திருக்கேதாரம் எட்டாம் வகுப்பு தமிழ்

 திருக்கேதாரம்  எட்டாம் வகுப்பு  தமிழ் 



 

 தேவாரம் 

 


தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள்.

சுந்தரர் தேவாரம்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம்..இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன.அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற இருவரான ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.



தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.


திருஞானசம்பந்தர் :

  • இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை
  • பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார்.
  • ஊர் – சீர்காழி

தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை.

சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார்.

திருநாவுக்கரசர் :

  • இயற்பெயர் – மருள்நீக்கியார்
  • சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர்
  • பெற்றோர் – புகழனார், மாதினியார்.
  • தமக்கை – திலகவதியார்
  • பிறந்த ஊர் – திருவாமூர்

இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சுந்தரர் :

  • பிறந்த ஊர் – திருநாவலூர்
  • பெற்றோர் – சடையனார், இசைஞானியார்.
  • இயற்பெயர் – நம்பியாரூரர்
  • சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர்.

இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன.

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.காட்டிலிருந்து வந்த …………………… கரும்பைத் தின்றன.
அ) முகில்கள்
ஆ) முழவுகள்
இ) வேழங்கள்
ஈ) வேய்கள்

இ) வேழங்கள்


2.‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) கனகச் + சுனை
ஆ) கனக + சுனை
இ) கனகம் + சுனை
ஈ) கனம் + சுனை

இ) கனகம் + சுனை


3.முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………….
அ) முழவுதிர
ஆ) முழவுதிரை
இ) முழவதிர
ஈ) முழவு அதிர

இ) முழவதிர

குறுவினா


1.தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

புல்லாங்குழல் மற்றும் முழவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக் கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்.

சிறு வினா


1.திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது, அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆன புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
  • கண்களுக்கு இனிய குளிர்ச்சிதரும் ஒளியை உடைய பொன் வண்ண நீர் நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த் திவலைகளை வாரி இறைக்கும்.
  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது தோன்றும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
  • இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

 

 

செவ்வாய், 15 அக்டோபர், 2024

அன்பாடும் முன்றில் மாணவர் குழு கூட்டம் பத்திரிகை செய்தி

 அன்பாடும் முன்றில் மாணவர் குழு கூட்டம் பத்திரிகை செய்தி 



பாதுகாப்போம் தாமிரபரணியை... பொம்மலாட்டம்

 


பாதுகாப்போம் தாமிரபரணியை...
பொம்மலாட்டம் மூலம் தாமிரபரணி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்த முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி கோமதி அவர்களுக்கும் முத்து கிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

அன்பாடும் முன்றில் மாணவர் குழு கூட்டம்

 


#அன்பாடும்முன்றில் 









இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி  பள்ளியில் அன்பாடும் முன்றில் மாணவர் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி கோமதி .அரிகேசவநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர். அரிகேசவநல்லூர் கண்ணடியன் கால்வாய் கரையில் 600 பனை விதைகளை மாணவ மாணவிகள் நட்டனர்வருவாய் ஆய்வாளர் திருமதி கோமதி அவர்கள் தாமிரபரணி விழிப்புணர்வு குறித்த பொம்மலாட்ட நிகழ்வு நிகழ்த்தினார் நிகழ்விற்கான ஏற்பாடுகளை   தலைமை ஆசிரியர் ராம்சந்தர் அன்பாடும் முன்றில் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் திருமதி முத்துச்செல்வி,மற்றும் ஆசிரியர்கள் அமுதவல்லி ,ஜேஸ்மாலா ,கோமதி ,அன்னலட்சுமி ,ஜெயலட்சுமி ஆகியோர்செய்திருந்தனர். இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் மகேஸ்வரன் ,ஆறுமுகம் ,முத்துகிருஷ்ணன் ,சுப்பிரமணியன் ,சேகர் ,பாரத் கமல்வேல் ஆகியோர் கலந்து கொண்டார்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

துன்பம் வெல்லும் கல்வி|ஆறாம் வகுப்பு| இரண்டாம் பருவம் |தமிழ்

துன்பம் வெல்லும்   கல்வி

 


 

 

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

நாட்டின் - நெறிதவறி

நடந்துவிடாதே - நம்

நல்லவர்கள் தூற்றும்படி

வளர்ந்து விடாதே! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது - பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது

மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது - தன்

மானமில்லாக் கோழையுடன் சேரக்கூடாது! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிடவேணும்

சோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேணும் - அறிவு

வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்

பெற்றதாயின் புகழும், நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேணும்! நீ...

ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே! - நீ...

ஏன்படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே!

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 


மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.மாணவர் பிறர் …………. நடக்கக் கூடாது.
அ) போற்றும்படி
ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி
ஈ) வியக்கும்படி

ஆ) தூற்றும்படி


2.நாம் …………… சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார்
இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்


இ) மூத்தோர்


3.கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) கையில் + பொருள்
ஆ) கைப்+பொருள்
இ) கை + பொருள்
ஈ) கைப்பு + பொருள்

இ) கை + பொருள்


4.மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) மானம் இல்லா
ஆ) மானமில்லா
இ) மானமல்லா
ஈ) மானம்மில்லா

ஆ) மானமில்லா

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனமாற்றம் – பெற்றோர் கூறிய அறிவுரையைக் கேட்டு கந்தன் மனமாற்றம் அடைந்தான்.
2. ஏட்டுக் கல்வி – ஏட்டுக் கல்வியுடன் தொழிற்கல்வியும் பெறுதல் சிறப்பானது.
3. நல்லவர்கள் – நல்லவர்களுடன் சேர்ந்து பழகுதல் இன்பம் தரும்.
4. சோம்பல் – மாணவர்கள் சோம்பலின்றி சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும்.

குறுவினா


1.நாம் யாருடன் சேரக் கூடாது?

நாம் தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.


2.எதை நம்பி வாழக் கூடாது?

பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.



3.இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள் எது?

இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் நினைவூட்டும் திருக்குறள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


4.நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ்ந்தால், அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெறலாம்.

சிறுவினா


1.நாம் எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?

(i) நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது; கற்றதன் பயனை மறக்கக்கூடாது.
(ii) நம் நாட்டின் நெறி தவறி நடக்கக்கூடாது. நல்லவர்கள் குறை சொல்லும்படி வளரக்கூடாது.
(iii) பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது. பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்பு நெறி மாறக்கூடாது.

(iv) பிறருடைய உழைப்பில் வாழக்கூடாது. தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது. துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும். சோம்பலைப் போக்கிட வேண்டும்.

(v) பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும். வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

(vi) மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும்.

(vii) பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும். நாம் இவ்வாறு வாழ வேண்டும் எனப் பட்டுக்கோட்யைார் கூறுகிறார்.

 

ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவம் தமிழ் 

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

கலங்கரை விளக்கம்|ஏழாம்வகுப்பு |தமிழ்|வினாவிடைகள்

 

கலங்கரை விளக்கம்|ஏழாம்வகுப்பு |தமிழ்|வினாவிடைகள்


 

 

 


பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.வேயா மாடம் எனப்படுவது ………………..
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது

ஆ) சாந்தினால் பூசப்படுவது


2.உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை

இ) கடல்



3.கடலில் துறை அறியாமல் கலங்குவன ………………..
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்

ஆ) மரக்கலங்கள்


4.தூண் என்னும் பொருள் தரும் சொல் ……………….
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை

ஈ) மதலை

குறு வினா


1.மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?

மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது : கலங்கரை விளக்கின் ஒளி.


2.கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?

கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.

சிறு வினா


1.கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள் யாவை?

(i) கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண் போலத் தோற்றம் அளிக்கின்றது.

(ii) அது ஏணி கொண்டு ஏறமுடியாத அளவுக்கு உயரத்தைக் கொண்டு இருக்கின்றது.

(iii) வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.

(iv) அம் மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைக்கின்றது.


சிந்தனை வினா


1.கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

  1. கடல் ஆய்வு செய்பவர்கள்
  2. மீனவர்கள்
  3. கப்பற் படை வீரர்கள்
  4. கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

மூதுரை|ஆறாம்வகுப்பு |தமிழ் |வினா விடைகள்

 

மூதுரை 

 


மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் மன்னற்குத் 

தன்தேசம் அல்லால் சிறப்பு இல்லை  கற்றோற்குச்

 சென்ற இடமெல்லாம் சிறப்பு.

 

மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. 

 

ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். சங்க காலம், இடைக்காலம், சோழர் காலம், பிற்காலம் எனப் பல காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்த ஔவையாரும் மூதுரை பாடிய ஔவையாரும் வெவ்வேறு காலத்தவர் ஆவர்.



 

 

 

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.மாணவர்கள் நூல்களை ………….. கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக
ஆ) மாசுற
இ) மாசற
ஈ) மயக்கமுற

இ) மாசற


2.இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) இடம் + மெல்லாம்
ஆ) இடம் + எல்லாம்
இ) இட + எல்லாம்
ஈ) இட + மெல்லாம்

ஆ) இடம் + எல்லாம்


3.மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மாச + அற
ஆ) மாசு + அற
இ) மாச + உற
ஈ) மாசு + உற

ஆ) மாசு + அற


4.குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) குற்றமில்லாதவர்
ஆ) குற்றம் இல்லாதவர்
இ) குற்றமல்லாதவர்
ஈ) குற்றம் அல்லாதவர்
 

அ) குற்றமில்லாதவர்



5.சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) சிறப்பு உடையார்
ஆ) சிறப்புடையார்
இ) சிறப்படையார் –
ஈ) சிறப்பிடையார்

ஆ) சிறப்புடையார்

குறுவினா


1.கற்றவரின் பெருமைகளாக மூதுரை கூறுவன யாவை?

(i) மன்னனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது கற்றவரே சிறந்தவர்.
(ii) மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.

சிறுவினா


1.கல்வியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

(i) கல்வி மனிதனை உயர்த்துகிறது. கல்வியும் செல்வமாகக் கருதத்தக்கது.
(ii) கல்வி பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.
(iii) கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது.
(iv) அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான். மன்னனையும் குறை இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவராகக் கருதப்படுவர்.
(v) மன்னனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு கிடைக்கும். ஆனால் கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு கிடைக்கும்.



1.கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.

கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகள் :
(i) கல்லாதவர் எவராலும் மதிக்கப்பட மாட்டார். வீட்டில் பெரிய பிள்ளையாக இருந்தாலும் கற்கவில்லையெனில் பெற்றோர் அவனை
ஒரு பொருட்டாக நினைக்கமாட்டார்கள்.
(ii) நன்மை தீமைகளைப் பகுத்தறிய இயலாது. எல்லோராலும் இகழப்படுவான்.