பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 28 ஆகஸ்ட், 2024

எட்டாம் வகுப்பு|இயல் மூன்று|தமிழர் மருத்துவம்|மதிப்பீடு|வினா விடைகள்

தமிழர் மருத்துவம்

வினா விடைகள்  எட்டாம் வகுப்பு 




  

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ……………… பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை

அ) தாவரங்களை


2.தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ………………. நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்

இ) உணவின்



3.உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ………….
அ) தலைவலி
ஆ) காய்ச்சல்
இ) புற்றுநோய்
ஈ) இரத்தக்கொதிப்பு
Answer:
ஈ) இரத்தக்கொதிப்பு

Question 4.
சமையலறையில் செலவிடும் நேரம் ………… செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வாழ்வுக்காக
ஈ) உணவுக்காக

இ) நல்வாழ்வுக்காக

குறுவினா


1.மருத்துவம் எப்போது தொடங்கியது?

மருத்துவத்தின் தொடக்கம் :
தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான்.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.


2.நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை :
தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம்.

எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.


3.தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

வேர், தழை போன்ற தாவர உறுப்புகளும் தாதுப் பொருட்களும் உலோகமும் தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவனவாகும்.

சிறுவினா


1.நோய்கள் பெருகக் காரணம் என்ன?

நோய்கள் பெருகியிருப்பதற்குக் காரணம் :
மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்.


சுற்றுச்சூழல் மாசு மற்றொரு காரணம்.

தன் உணவுக்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ண மும் மனஅழுத்தமும் எது கேளிக்கை, எது குதூகலம், எது படிப்பு, எது சிந்தனை என்ற புரிதல் இல்லாமையும் கூடுதல் காரணங்கள் ஆகும்.

நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக

அறிவியல்  அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்துவிட்டோம். இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்துவிட்டோம். இதுவே இன்றைக்குப் பல நோய்கள் பெருக மிக முக்கியமான காரணம் ஆகும்.


2.பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் :
(i) நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

(ii) சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

(iii) விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

(iv) எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(v) கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.

(vi) இரவுத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது.

(vii) உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

நெடுவினா


1.தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக

மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை :
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”

என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்த விளங்கினர். உலகில் பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் தமக்கென மரபு சார்ந்த மருத்துவ முறைகளை உருவாக்கிப் பின்பற்றி வந்தனர். அத்தகைய மருத்துவ முறைகள் பற்றிய செய்திகளை இக்கட்டுரை மூலம் அறியலாம்.

தொடக்கக் காலத்தில் தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தினர். தமிழர் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் போன்றவற்றையும் உடலை வளப்படுத்தி உள்ளத்தைச் சீராக்கும் யோகம் முதலிய கலைகளையும் அறிந்திருந்தார்கள்.

மருத்துவ முறைகள் :
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் என்றெல்லாம் மருத்துவமுறைகள் பல இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே நோயைக் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்துள்ளது.

தமிழர் மருத்துவம் பின்தங்கியதும் மறுமலர்ச்சி அடைந்ததும் :
ஆங்கிலேயரின் வருகையால் நவீன மருத்துவம் தலை தூக்கியது. இம்மருத்துவம் துரிதமாகச் சில நோய்களைத் தீர்த்தன. அதனால் தமிழர் மருத்துவம் பின்தங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு முதலிய நோய்களுக்குத் தீர்வு காண இரசாயன மருந்துகள் போதாது என்றும், இதனுடன் உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உணர்ந்தனர். மேலும் இம்மருத்துவமுறை பக்கவிளைவுகள் அற்றது என்பதாலும் மறுமலர்ச்சி அடைந்தது.

சித்த மருத்துவ மருந்துப் பொருள்கள் :
வேர், தழையால் குணமாகாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினர். மேலும் ஒவ்வொருவருடைய உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு மருத்துவம் மாறுபடும். நோயாளியின் வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப் போக்கு மரபுவழி எப்படிப்பட்டது என்பனவற்றை ஆராய்ந்து சிகிச்சை அளித்தது தமிழர் மருத்துவம்.

மருத்துவத்தில் பக்க விளைவுகள் :
ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும். பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவில், எந்தத் துணை மருந்துடன் கொடுத்தால் பக்க விளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர்.

தமிழர் மருத்துவத்தின் சிறப்பு :
தனித்துவமான பார்வை தமிழர் மருத்துவத்தின் முதல் சிறப்பு. சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.

முடிவுரை :
நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கும் தமிழ்மருத்துவமுறையை நாமும் பின்பற்றி நோயின்றி வாழலாம்.

சனி, 24 ஆகஸ்ட், 2024

விலங்குகள் உலகம்|ஏழாம் வகுப்பு | முதல் பருவம்|வினா விடைகள்| கூடுதல் தகவல்கள்

 விலங்குகள் உலகம்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் (KMTR) பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இந்த பிராந்தியத்தில் தாவர வகைகள் உள்ளன, அவை வறண்ட முள் காடுகளாக இருந்து படிப்படியாக உலர்ந்த இலையுதிர், ஈரமான இலையுதிர் மற்றும் மேற்கு கடற்கரை ஈரமான பசுமையான காடுகளின் ஒரு பகுதியாக மாறுகின்றன. KMTR "தமிழ்நாட்டின் முதல் புலிகள் காப்பகம்" மற்றும் நாட்டின் 17வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த காப்பகத்தின் காடுகள் வளமான பல்லுயிர் மற்றும் உள்ளூர் தன்மையைக் கொண்டுள்ளன.
மேலோட்டம்
KMTR ஆனது, களக்காடு வனவிலங்கு சரணாலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வீரப்புலி மற்றும் கிளமலை காப்புக்காடுகளின் ஒரு பகுதி ஆகிய இரண்டு அடுத்தடுத்த சரணாலயங்களைக் கொண்ட 895 சதுர கிலோமீட்டர் மையப் பகுதியைக் கொண்டுள்ளது. முண்டந்துறை புலிகள் சரணாலயம் 1962 ஆம் ஆண்டு நாட்டின் முதல் புலிகள் சரணாலயமாக புலிகள் பாதுகாப்பு தேசிய கவனம் செலுத்தப்படுவதற்கு முன்பே தமிழகத்தின் முன்னோடி பார்வையுடன் அறிவிக்கப்பட்டது. களக்காடு வனவிலங்கு சரணாலயம் 1976 ஆம் ஆண்டு முதன்மையாக சிங்கவால் மக்காக்கின் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டது. KMTR ஆனது தெற்கில் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தின் 20136 ஹெக்டேர், நெல்லை வனவிலங்கு சரணாலயத்தின் வடக்கில் 3528 ஹெக்டேர் மற்றும் கிழக்கில் 46990.20 ஹெக்டேர் சுற்றுச்சூழல் மேம்பாட்டு மண்டலத்தைக் கொண்ட தாங்கல் மண்டலத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆறு மற்றும் பிற 13 ஆறுகள் KMTR இலிருந்து உற்பத்தியாகின்றன, மேலும் இந்த ஆறுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக உயிர்நாடியாக அமைகின்றன. எனவே, KMTR நதி சரணாலயம் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.
 











































 
 
யானைகள்
உலகில் பல்லாயிரகணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும், அவை அனைத்தும் இரண்டு வகையை சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள்; மற்றொன்று ஆஃப்ரிக்க யானைகள்.

 
 
பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது.

 
யானை பிறக்கும் போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது.

 
யானைகளுக்கு கண் இமைகள் உள்ளன.

 
ஆப்பி ரிக்க யானைகள்தான் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு. டைனோசர் எல்லாம் நாம் நினைவில் வேண்டுமானால் வாழலாம். இப்போது நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைகள்தான் பிரம்மாண்டமானவை.

 
யானைகளுக்கு பிடிக்காத ஒரு உயிரினம் 'தேனீ'   

 
 
மனிதனின் மொத்த உடலில் உள்ள சதையைவிட யானையின் தும்பிக்கையில் அதிக சதை உள்ளது.

 
யானைகள் 22 மாதங்கள் கர்ப்பமாக இருந்து குட்டியை ஈன்றெடுக்கும்.

 
யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது. பொதுவாக மனிதர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாக இருந்தாலும், இடது கை பழக்கம் உடையவர்களும் இருக்கிறார்கள் தானே... அது போல யானைகளையும் நாம் அடையாளப்படுத்தலாம். அதாவது, எந்த பக்க தந்தத்தை அது அதிகம் பயன்படுத்துகிறது என்பதை பொறுத்து அதனை அடையாளப்படுத்த முடியும்.   

 

 
உலக வனவிலங்கு நிதியத்தின் கணக்குப்படி, உலகில் இப்போது 4,15,000 ஆஃப்ரிக்க யானைகள் உள்ளன. 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. எண்ணிக்கையில் பார்ப்பதற்கு அதிகமாக தெரிந்தாலும், இவை அருகிவரும் விலங்கினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் வேட்டையாடுதல் தான். 
 
புலியின் உடலில் இருக்கும் கோடுகள் மேல் புறத்தில் உள்ள முடிகளில் மட்டுமல்ல அதன் தோலிலும் இப்படியான வரிக்கோடுகள் இருக்கும்.


பூனையின் 95க்கும் அதிகமான டி.என்.ஏ புலிகளிடம் இருக்கிறது.
மனிதர்களுக்கு இருக்கும் கை ரேகை போன்று தான் புலிகளின் உடலில் இருக்கும் கோடுகள். ஒவ்வொரு புலிக்கும் இது வேறுபடும்.

பெரும்பாலும் புலிகளுக்கு மஞ்சள் நிறத்தில் தான் கண்கள் இருக்கும் வெள்ளைப்புளிகளுக்கு நீல நிறத்தில் கண்கள் இருக்கும் சில வெள்ளைப்புளிகளுக்கு மாறுகண் இருக்கும். மனிதர்களுக்கு தெரிவது போன்றே புலிகளுக்கு வண்ணங்கள் தெரியும்

புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் வேட்டையாடுவதையே விரும்பும். ஏனென்ன்றால் புலிகளுக்கு இரவு நேரத்தில் மனிதர்களை விட 6 மடங்கு பார்வை கூர்மையாய் இருக்கும்.
புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும். பத்தில் ஒரு புலியின் வேட்டை தான் வெற்றியடையும். இதனால் புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும். புலிகளுக்கு ஜீரண சக்தியும் குறைவு என்பதால் ஒரு நாள் எடுத்துக் கொள்ளும் கிலோ கணக்கிலான உணவினை செரிக்க தாமதமாகும்.

புலிகள் தான் வாழுமிடத்தைச் சுற்றி ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளும் இந்த எல்லைக்குள் பிற விலங்குகள் வராமல் பாதுகாக்கும். இந்த எல்லையை தன்னுடைய சிறுநீரால் வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புலியின் சிறுநீர் வாசத்தைக் கொண்டே எல்லைக்குள் இருப்பது ஆணா, பெண்ணா? அதன் வயது போன்றவற்றை பிற புலிகள் கண்டுபிடித்துவிடும்.
புலிகளின் எச்சிலே அதற்கு ஆண்ட்டிசெப்டிக் மருந்தாக செயல்படும். காயம்பட்ட இடத்தில் அதனுடைய எச்சிலை வைத்தால் தொற்று ஏற்படாமல் காத்திடும்.





மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


1.ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்கள்

ஆ) தந்தம்


2.தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ………..
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியக்கரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தன்குளம்

இ) முண்டந்துறை


3.‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) காடு + ஆறு
ஆ) காட்டு + ஆறு
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு

அ) காடு + ஆறு


4.‘அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி

ஈ) அனைத்து + உண்ணி
5.‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம் ஆகி
ஈ) நேர் ஆகி

அ) நேரமாகி


6.‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வேட்டை ஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடிய
ஈ) வேடாடிய

ஆ) வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக


1‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு

புலி


2.யானைக் கூட்டத்திற்கு ஒரு ……….. யானைதான் தலைமை தாங்கும்.

பெண்


3.கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………

அடர்ந்த முடிகள்

குறுவினா


1.காடு – வரையறு.

வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என் அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற
பல்லுயிர்களின் வாழ்விடமாகும்.


2.யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?

  • பொதுவாக யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை.
  • யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.


3.கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?

கரடி பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் போன்ற வற்றை உணவாக உள்கொள்வதால் அனைத்துண்ணி என அழைக்கப்படுகின்றன.


4.மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.

இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் என்பவை மானின் வகைகள் ஆகும்.

சிறுவினா


1.புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி
    மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
  • கர்ப்பம் அடைந்த புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் (அல்லது) ஈன்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கும்.
  • அப்புலிக்குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
  • புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும்
    வேட்டையாடுவதில்லை. எனவே இதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.

சிந்தனை வினா


1.காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் :

(i) மரங்களை அழிப்பதால் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.

(ii) காடுகளை அழிப்பதன் விளைவாக மழை அளவு குறைகிறது. தட்ப வெப்பநிலை
மாற்றமடைகிறது. மண் அரிமானம் ஏற்படுகிறது.

(iii) புவி வெப்பமடைதல் நடைபெறுகிறது. இதன் விளைவாக தீயன உண்டாகின்றன.
மழைக் காலங்கள் மாறுபடுகின்றன. இயற்கைத் தாவரங்கள், மரங்கள் சட்டத்திற்குப் புறம்பாக அழிக்கப்படுகின்றன.(iv) காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் காட்டு விலங்கினங்கள் நாட்டுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. மேலும் மனித உயிர்களை அச்சுறுத்திக் கொல்லுகின்றன. யானை, காட்டெருமை, புலி போன்ற விலங்குகள் கூட்டமாக உணவிற்காகவும் நீருக்காகவும் விளை நிலங்களுக்குள் வந்து அவற்றை அழிக்கின்றன.

(v) காடுகளை அழிப்பதாலும் மற்ற வெவ்வேறு காரணங்களாலும் பல்வேறு தாவர
இனங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவுக்குத் தள்ளப்படுகின்றன.