செவ்வாய், 30 ஜூலை, 2024
CPS |TPF |ACCOUNT SLIP | KALANJIYAM MOBILE APP| STEPS TO VIEW BALANCE DETAILS |
வெள்ளி, 26 ஜூலை, 2024
புதன், 24 ஜூலை, 2024
அன்பாடும் முன்றில் திட்டம்
அன்பாடும் முன்றில் திட்டத்தின் படி நம் அரிகேசவநல்லூர் இந்துநடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் குழுக்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மணிமுத்தாறு ,சேர்வலாறு ,நம்பியாறு, தாமிபரபரணி- குழு பொறுப்பாசிரியர் மற்றும் ஒவ்வொரு வகுப்பிற்குரிய குழுக்களின் மாணவர் குழுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
செவ்வாய், 23 ஜூலை, 2024
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் அசத்தும் நூற்றாண்டு பாரம்பரிய பள்ளி..! https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/centenary-traditional-school-with-smart-technology-860218
திங்கள், 22 ஜூலை, 2024
தாய்வீடு தொண்டு நிறுவனத்தின் பழமரங்கள் நடும் விழா
தாய்வீடு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அன்பு சகோதரர் மகேஸ்வரன் அவர்கள் கடந்த வாரம் பள்ளிக்கு வருகை தந்து மூன்று மரக்கன்றுகளை நட்டு விட்டுச் சென்றார். அப்போது சகோதரரிடம் இன்னும் 20 மரங்கள் நம் பள்ளி வளாகத்தில் நடலாம், எங்களுக்கு பழமரங்கள் நட விருப்பமாக உள்ளோம் என்று கூறினேன். உடனடியாக மறுப்பேதும் கூறாமல் அதற்கென்ன பழ மரங்கள் நட்டால் போச்சு.... என்று புன்னகையுடன் கூறிச் சென்றவர் ,இன்று தனது தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி ஆகியோருடன் பள்ளிக்கு வருகை தந்து 15 பழ மரக்கன்றுகளை எம் பள்ளி மாணவ மாணவியரை வைத்து நட வைத்தார்கள். மேலும் பள்ளி வளாகம் மற்றும் மாணவர்களுக்கு எத்தனை மரக்கன்றுகள் வேண்டுமானாலும் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று மிகவும் மகிழ்வுடன் கூறிச் சென்றார்கள். இன்று பிறந்தநாள் கொண்டாடிய முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி .கோமதி மற்றும் எம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி தங்க தன்ஷிகா ஆகியோர் பழ மரக்கன்றுகளை நட்டார்கள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்களாக எங்களுக்கும் எம் மாணவர்களுக்கும் இன்று அமைந்தது. அன்பு சகோதரர் மகேஸ்வரன் அவர்களுக்கும் அவருடன் வந்த தன்னார்வலர்களுக்கும் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சனி, 20 ஜூலை, 2024
மாணவ மாணவிகளுக்குப் பாராட்டு விழா
திருநெல்வேலி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பாராட்டு விழா இன்று அரிகேசநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு.ம ராம் சந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இந்திய குத்துச்சண்டை வீரரும் வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளருமான திரு. இ . இசக்கி ராஜா., B.E.,M.B.A.,M.Tech.,M.A.B.L(World Cup and Asian Medalist) அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். மேலும் மாணவர்களிடம் தாம் கடந்து வந்த பாதையை நினைவு கூறினார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கையும் ஒழுக்கமும் மிகவும் முக்கியம் எனவும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் எப்பொழுதும் போதைப் பழக்கத்துக்கு ஆளாக கூடாது என்றும் சாதி மத பேதங்களைக் கடந்து சுய ஒழுக்கத்துடன் கல்வியை கற்று மேன்மையடைய வேண்டும் என்றும் படிக்கின்ற வயதிலேயே எதிர்காலத்தில் தான் சாதிக்க நினைக்கும் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரையாற்றினார்.மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் பட்டதாரி ஆசிரியை திருமதி சு . முத்துச்செல்வி அவர்கள் நன்றியுரை கூறினார். எட்டாம் வகுப்பு மாணவி சு.பேச்சியம்மாள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி.அமுதவல்லி,திருமதி.ஜேஸ் மாலா ,திருமதி.கோமதி,திருமதி. அன்னலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்
https://www.hindumiddleschool.me/news
வியாழன், 18 ஜூலை, 2024
டேக்வான்டே போட்டி-2024
திருநெல்வேலி மாவட்ட அளவிலான
திருநெல்வேலி மாவட்ட அளவிலான டேக்வான்டே போட்டியில் நம் அரிகேசவநல்லூர் இநது நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டு 6 தங்கப் பதக்கங்கள் 4 வெள்ளிப் பதக்கங்கள் 6 வெண்கலப் பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கும் பயிற்சி அளித்த டேக்வாண்டே பயிற்சியாளர் திரு. பாரதிராஜா அவர்களுக்கும் உடனிருந்து உற்சாகமூட்டிய எம் பள்ளி ஆசிரியர்கள் திருமதி .முத்துச்செல்வி, திருமதி ஜெஸ்மாலா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.